sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

ரத்தக் கசிவிற்கான அறிகுறிகள் என்ன?

/

ரத்தக் கசிவிற்கான அறிகுறிகள் என்ன?

ரத்தக் கசிவிற்கான அறிகுறிகள் என்ன?

ரத்தக் கசிவிற்கான அறிகுறிகள் என்ன?


PUBLISHED ON : ஜூன் 30, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 30, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலை விபத்து போன்ற காரணங்களால் ஏற்படும் காயங்கள், பல்வேறு நோய்களுக் காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றால், நம் உடலில், ரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த கசிவை நிறுத்தி, ரத்தத்தை உறைய செய்ய, 13 உறைவிக்கும்

காரணிகள், இயற்கையாகவே, மனித ரத்தத்தில் உள்ளன.

ஆனால், 'ஹீமோபிலியா' எனும் மரபணு கோளாறு உள்ளவர்களுக்கு, ரத்தத்தை உறையச் செய்யும் ஒரு காரணி இல்லாமல் இருக்கும் அல்லது குறைவாக இருக்கும்.

இதனால், அவர்கள் ரத்தக் கசிவிற்கு ஆளாகும்போது, மற்றவர்களை விட, நீண்ட நேரத்திற்கு ரத்தம் கசிந்துக் கொண்டேயிருக்கும்.

'ஹீமோபிலியா' குறைபாடுள்ள பச்சிளம் குழந்தைகளில் ரத்தக் கசிவு ஏற்படுவது அரிதானது என்றாலும், அவர்கள் வளர வளர, தானாக ஏற்படும் ரத்தக் கசிவு மிகவும் பொதுவானதாகி, அது, மூட்டுக்களையும், திசுக்களையும் பாதிக்கிறது.

மூட்டு ரத்தக் கசிவு, பெரும்பாலும், கணுக்கால், முழங்கால், முழங்கை ஆகிய இடங்களில் ஏற்படுகிறது. கால் விரல்கள், தோள் பட்டைகள், இடுப்பு மூட்டுக்கள் உள்ளிட்ட, மற்ற மூட்டுகளிலும், ரத்த கசிவு ஏற்படலாம். கெண்டைக் கால், தொடை போன்ற இடங்களில் ஏற்படும் தசை ரத்தக் கசிவுகள் பொதுவானவை. மேலும், தலை, தண்டுவடம், வயிறு ஆகிய உறுப்புகளிலும், தொடர் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

இவற்றுக்கான அறிகுறிகளை அறிந்து கொள்வதன் மூலம், 'ஹீமோபீலியா' குறைபாடுள்ளவர் களுக்கு, உரிய சிகிச்சை அளித்து, அவர்களை காப்பாற்றலாம்.

மூட்டு: மூட்டில் ஒருவித சிலிர்ப்பு உணர்வு உண்டாவது, மூட்டின் மீதுள்ள தோல் வெதுவெதுப்பாவது, மூட்டில் ஏற்படும் வீக்கம் மற்றும் அதை கொஞ்சம்கூட நகர்த்த முடியாத அளவிற்கு வலி ஏற்படுவது.

தசை: பாதிக்கப்பட்ட கை அல்லது காலை அசைக்க முடியாதது, ரத்த கசிவு உள்ள இடத்தில் ஏற்படும் வெதுவெதுப்பு உணர்வு, நடக்கும்போதும், நிற்கும்போதும், குதிகாலை தரையில் வைக்க முடியாதது, கை, கால்களில், திடீரென வலி அதிகரிப்பது.

தலை: வாந்தி, தலைச்சுற்றல், வலிப்பு, தொடர் தலைவலி, நடப்பதில் சிரமம், மங்கலான பார்வை, காதுகள் அல்லது மூக்கில் ரத்தக் கசிவு உண்டாவது.

தண்டுவடம்: கால்கள் பலவீனம் அடைவது, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பது சிரமமாவது, கால்களில் வலி ஏற்படுவது.

வயிறு: ரத்த வாந்தி ஏற்படுவது, சிவப்பான அல்லது கறுமை நிறத்தில் மலம் கழிப்பது.

தகவல்: 'ஹீமோபிலியாவுடன் வாழ்க்கை வாழ்வதற்கான ஓர் வழிகாட்டி' எனும் கையேட்டில் இருந்து.






      Dinamalar
      Follow us