தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொழுப்பு குறைக்க என்ன செய்யலாம்?

கொழுப்பு குறைக்க என்ன செய்யலாம்?

கொழுப்பு குறைக்க என்ன செய்யலாம்?


PUBLISHED ON : மார் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 06, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

கொழுப்பில் இரண்டு வகை உண்டு. அவை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு. இதில், நல்ல கொழுப்பை எச்.டி.எல்., என்றும், தீய கொழுப்பை எல்.டி.எல்., என்றும், மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உடல் ஆரோக்கியத்தை, நல்ல கொழுப்புகள் ஊக்குவிக்கின்றன. தீய கொழுப்புகள் ரத்தநாளங்களிலும், ரத்தத்திலும் சேருவது நல்லதல்ல. கெட்ட கொழுப்புகளை அகற்ற, மருந்துகளை விட, தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது, யோகாசன பயிற்கிகள் செய்வது உதவும்.

கெட்ட கொழுப்பை குறைக்க, சில எளிய உணவு வகைகளும் உள்ளன. இதில், வெண்ணெய் பழத்தை முக்கியமாக குறிப்பிடலாம். இப்பழத்தை உண்ணுவதால், உடலில் உள்ள தீய கொழுப்பு அகலுவதோடு, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. இப்பழத்தில் உள்ள சத்து, ரத்தநாளங்கள் மற்றும் ரத்தத்தில் உள்ள தீய கொழுப்பை அகற்றும் பணியை மேற்கொள்கிறது. பாதாமில் உள்ள சத்துகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவுகிறது.

இதயத்தில் உள்ள ரத்த நாளங்கள், சேதமடையாமல் இருக்கவும் உதவுகிறது. எனவே, அதிகாலையில் பாதாம் உண்ணுவதை வழக்கமாக்கி கொள்வது நல்லது. கடல் மீன்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மீன்களில் உள்ள, ஒமேகா என்ற சத்து, இதயத்துக்கு மிகவும் நல்லது.

அதே போல, நார்ச்சத்து மிக்க உணவுகளை உண்பது, நம் உடல் நலனுக்கு ஏற்றது. அவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. பழங்கள், காய்கறிகள், தானியங்களில் நார்ச்சத்து அதிகளவு உள்ளது. தினமும் பழம், காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு, ஓட்ஸ் சிறந்த உணவு. இதை தினமும் உண்டால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை, கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us