sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/மசக்கைக்கு என்ன சாப்பிடலாம்?

மசக்கைக்கு என்ன சாப்பிடலாம்?

மசக்கைக்கு என்ன சாப்பிடலாம்?


PUBLISHED ON : மார் 15, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2015


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கர்ப்பமாகி இரண்டாவது மாத துவக்கத்திலேயே மசக்கை உண்டாகும். அதாவது, காலையில் பல் துலக்கும்போதோ அல்லது காலை உணவை சாப்பிட்டவுடனோ வாந்தி, குமட்டல் ஏற்படும். இரண்டாவது மாதத்தில் ஏற்படும் இந்த குமட்டல், வாந்தி சில வாரங்கள் அல்லது அரிதாக, மூன்று மாதங்களுக்கு மேலும் நீடிப்பது உண்டு.

மிகவும் பிடித்த உணவு, பிடிக்காமல் போவது, புளிப்பான உணவுப் பொருட்களை விரும்புவது, பிடிக்காத உணவுப் பொருட்களின் மீதான ஆசை ஆகியவை, மசக்கையின் அறிகுறிகள்.

நாம் சாப்பிடும் சாப்பாட்டை பார்த்தாலே, வாந்தி வருவது போன்ற உணர்வு, சமைக்கும் போது வரும் வாசனையை நுகர்ந்தாலே வாந்தி வருவது; சாதம் கொதிக்கும்போது வரும் வாசனை பிடிக்காமல் போவது ஆகியவையும் மசக்கைதான்.

பசிக்கும் ஆனால் சாப்பிட உட்கார்ந்தால் வாந்தி எடுப்பதா அல்லது சாப்பிடுவதா என்ற குழப்ப நிலையை உருவாக்கும். உடலுக்கு நல்லதல்ல என்று ஒதுக்கும் பொருட்களின் மீது அதிக விருப்பமும் இந்த சமயங்களில் ஏற்படுவது உண்டு.

காலையில் பல் துலக்கும்போது வாந்தி எடுப்பது, வாந்தி வருகிறது என்று, சாப்பிடாமலேயே இருப்பது போன்றவை அல்சரை உண்டாக்கிவிடும். எனவே, எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் சிறிது சிறிதாக உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

திரவ உணவாகவோ, பழம், காய்கறிகள் போன்றவற்றையோ கொஞ்சம் கொஞ்சமாக உண்ணலாம். சிலருக்கு இரவில் அதிகமாக பசிக்கும். அந்த சமயத்தில் சாப்பிடுவதற்கென பிஸ்கட், பழம், பால் போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். வாந்தி வரும் என்ற உணர்வை விட, வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை நினைவில் கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us