sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

சுத்தமான தேன் எது?

/

சுத்தமான தேன் எது?

சுத்தமான தேன் எது?

சுத்தமான தேன் எது?


PUBLISHED ON : ஏப் 19, 2015

Google News

PUBLISHED ON : ஏப் 19, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன் ஒரு விலை மதிக்க முடியாத உணவு பொருள். இது ஒரு அரிய வகை மருந்து. தேனை உரிமை கொண்டாடாத நாடுகளே இல்லை. சுத்தமான தேன், ஒருபோதும் கெட்டுப்போகாது. இவற்றின் பயன்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டால் அசந்து போவோம்.

தேனில், 78 பங்கு கரி நீரைகளும் (Carbo Hydrates), 18 பங்கு தண்ணீரும், 0.2 பங்கு தாதுப்பொருட்களும், 3.8 பங்கு பயன் தரும் பலவித நுண்ணிய வளங்களும் இருக்கின்றன. இதுதான் என குறிப்பிட்டு சொல்லமுடியாத பல நல்ல சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.

பூவிலுள்ள மகரந்தம், பிசின், வச்சிரம் (Glue) எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய்கள் போன்றவை அவற்றில் உள்ளன. மகரந்தம் என்பது ஒரு நேர்த்தியான பொடி. அது சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தலைசிறந்த ஆகாரமாகும்.

தேன் இருதய வளர்ச்சிக்கு மிக முக்கியமானது ஆகும். இதனை சாப்பிடுவதால் மனம் தேறுவதுடன், இருதயமும் துப்புரவாகி வலிமை அடைகிறது. காமாலை, சீதபேதி நோய்களையும், மூத்திரப்பை மற்றும் இருதயம் முதலிய முக்கிய உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் நல்ல மருந்து தேன் என தெரிவிக்கின்றனர். நாம் உண்ணும் உணவை செரிக்கும் நல்ல மருந்து தேன்.

இறைச்சி உண்ணுவதை விட தேனை குடித்தால், அதிக உற்சாகமும் ஆற்றலும் உண்டாகும். திருமணமான தம்பதிகள் இரவில், பால் பருகும்போது ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிட்டு வந்தால், சுக்கில கட்டும் ஆற்றலும் அதிகரிக்கும். பித்தம் அதிகமாகி அல்லல்

படுபவர்கள், இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொண்டு சிறு துண்டுகளாக வெட்டி, தேனில் இரண்டு அல்லது முன்று நாட்கள் ஊற வைத்து, அதிகாலையில் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட பித்தமும் நீங்கிவிடும்.

குழந்தைகளுக்கு தினந்தோறும் அரை தேக்கரண்டி தேனை கொடுத்து வந்தால், தசைகள் உறுதியாகும். ரத்தம் சுத்தமாகி ஆற்றலுடனும், அழகுடனும் விளங்குவார்கள். கடும் வயிற்று வலிக்கு, ஒரு டம்ளர் கொதிக்கும் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனை விட்டு, நன்றாக கலக்கி பருகி விட்டால் பதினைந்து நிமிடங்களில் வயிற்று வலி பறந்துவிடும்.

எது நல்ல தேன்? சுத்தமான தேன் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சுத்த வெள்ளையாகவோ அல்லது கருப்பாகவோ இருப்பது, நல்ல தேன் என்று தெரிந்து கொள்ளலாம். தேனின் மணமும், நிறமும் எந்த பூக்களிலிருந்து தேனீக்கள் மது சேர்க்கின்றதோ, அப்பூக்களை சார்ந்தே இருக்கும்.

வேப்பம்பூவில் சேகரிக்கப்பட்ட தேன், சற்று கசந்தே இருக்கும். ஹோலி தேன் கருப்பாக இருக்கும் நல்ல வாசனை கமழும். மஞ்சள் நிற தேன், பல வகை காடுகளில் சேமித்து வைக்கப்பட்ட தேனாகும். பளிங்கு போன்று முகம் பார்க்ககூடிய தெளிவுடைய தேனை, சற்று நேரம் வைத்திருந்தால் உறைந்து விடும். இதுவும் மிகவும் மேலான தேனாகும்.






      Dinamalar
      Follow us