தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வயிற்றுப் புண் ஓடிப்போகும்

வயிற்றுப் புண் ஓடிப்போகும்

வயிற்றுப் புண் ஓடிப்போகும்


PUBLISHED ON : ஆக 23, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

உணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். 10 தினங்கள் இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண் ஆறிவிடும். கடுமையான வயிற்றுவலி உள்ளவர்கள், கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்ற வேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன், அந்த நீரை குடிக்க வேண்டும்.

இவ்வாறு குடிப்பதால் ஜீரணக்கோளாறுகளும் குணமாகும்.

வயிற்றில் எரிச்சல், இரைச்சல் இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் இரண்டு டீஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் குணமாகிவிடும். இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து

சிவக்கும்படி வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும்.

சுண்டக்காய்ந்ததும் இறக்கி, வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால், செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.

ஒரு டீஸ்பூன் மிளகை தூள் செய்து, மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமான கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்றுநோய் குணமாகும். மார்பு சளி பிரச்னையும் சரியாகும்.

அகத்தி கீரையைக் காம்பு நீக்கி, ஆய்ந்தெடுத்து ஆவியில் வேகவைக்க வேண்டும். அதை சாறு பிழிந்து எடுத்து, அதனுடன் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும். தகுந்த மருத்துவரின் ஆலோசனையின்படி, இவற்றை உட்கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us