தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மனசே மனசே குழப்பம் என்ன! - தலைவலியைக் கட்டுப்படுத்தும் ஆசனம்!

மனசே மனசே குழப்பம் என்ன! - தலைவலியைக் கட்டுப்படுத்தும் ஆசனம்!

மனசே மனசே குழப்பம் என்ன! - தலைவலியைக் கட்டுப்படுத்தும் ஆசனம்!


PUBLISHED ON : ஜூன் 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தலைவலி பல வகை; அதில், இது ஒரு தனி வகை என்ற பொதுவான எண்ணம், 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி குறித்து உள்ளது. மைக்ரேன் என்பது, நரம்புகளில் ஏற்படும் கோளாறு; ஒரு பக்கம் மட்டுமே வரும் வலியின் தன்மை, நபருக்கு நபர் மாறுபடும். தலைவலி வந்து விட்டால், சமாளிப்பது எவ்வளவு சிரமம் என, பாதிக்கப்பட்டவர்களைக் கேட்டால் தெரியும். தலைவலியால் சிரமப்படுபவர்களைப் பார்த்தால், 'எதிரிக்குக் கூட இந்த நிலை வரக் கூடாது' என்று நினைக்கும் அளவிற்கு இருக்கும்.

வலி இருக்கும் நேரத்தில் சப்தமும், வெளிச்சமும் வலியை மேலும் அதிகப்படுத்துவதோடு, குமட்டல், தலை சுற்றல் இருக்கும்.

தீர்வு:

மைக்ரேன் தலைவலிக்கு, வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தத்தைக் கையாளும் வழிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமே தீர்வு. மருந்துகளால், எந்த பலனும் கிடையாது. நீண்ட நாட்களாக வலி நிவாரணிகளை எடுப்பதால், பக்க விளைவுகளின் பாதிப்புகள் இருக்கும்.

மைக்ரேன் பிரச்னைக்கு, யோகாசனம் மிகச் சிறந்த தீர்வாக இருப்பது, சர்வதேச அளவில் செய்த ஆய்வில், உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கென்றே பிரத்யேகமாக உள்ள பலாசனா, சாது பந்த சர்வாங்காசனா, அதோ முக சுவானாசனா ஆகிய மூன்று ஆசனங்களை, பயிற்சி பெற்ற யோகா ஆசிரியரிடம், முறையாக கற்று தொடர்ந்து செயததில், சில வாரங்களில், நல்ல பலன் தெரியும்.

இந்த ஆசனங்களை, வாரத்திற்கு ஐந்து நாட்கள், தினமும், 30 நிமிடங்கள் செய்தால், படிப்படியாக வலியின் தீவிரம், தன்மை குறைந்து, வாரத்திற்கு இரண்டு நாட்கள் வருவது, ஒரு நாள், அதன் பின், மாதம் ஒரு நாள் என்று, எண்ணிக்கை குறைவது, தெரிய வந்துள்ளது.

இந்த ஆசனங்கள், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, பதற்றத்தைக் குறைத்து, மூளைக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன.

டாக்டர் ஜி.பிரகாஷ்,

ஜிண்டால் நேச்சுரோ கேர் இன்ஸ்டிடியூட்,

பெங்களூரு.

080 - 23717769 / 70

info@jindalnaturecare.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us