தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சர்க்கரை கோளாறுக்கும், நீர்க்கட்டிக்கும் என்ன தொடர்பு?

சர்க்கரை கோளாறுக்கும், நீர்க்கட்டிக்கும் என்ன தொடர்பு?

சர்க்கரை கோளாறுக்கும், நீர்க்கட்டிக்கும் என்ன தொடர்பு?


PUBLISHED ON : ஜன 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்' - பி.சி.ஓ.எஸ்., எனப்படும் நீர்க்கட்டி, பொது சுகாதாரப் பிரச்னையாகி விட்டது. இது உளவியல், வளர்சிதை மாற்றம், இனப்பெருக்கம் தொடர்பான பிரச்னைகள் உள்ள அனைத்து வயது பெண்களையும் பாதிக்கிறது.

சீரற்ற ஹார்மோன் செயல்பாட்டால் ஏற்படும் பிரச்னை பி.சி.ஓ.எஸ்., 'டெஸ்டோஸ்டிரான்' ஹார்மோன் அதிகரிப்பது, கரு முட்டைகள் முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருப்பது, கருப்பைகள் பெரிதாகி, திரவம் நிரம்பிய பாலிசிஸ்டிக் கருப்பைகளாக மாறுவது ஆகியவையும் இது உருவாக காரணம்.

பி.சி.ஓ.எஸ்., என்பது பொதுவாக 2 - 26 சதவீதம் இனப்பெருக்க வயதுடைய பெண்களை பாதிக்கும். பாதிக்கப்பட்ட பெண்களில், 70 சதவீதம் பேருக்கு பிரச்னை இருப்பதே தெரிவதில்லை.

மரபியல் காரணிகளால் இப்பிரச்னை வருமா என்பது பற்றி, எந்த ஆதாரமும் இல்லை; மரபணு பரிசோதனை முறை எதுவும் இல்லை.

பொதுவான அறிகுறிகள்

பதப்படுத்திய, சுத்திகரித்த உணவுகள் அதிகம் சாப்பிடுவதால், இன்சுலின் ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதும் பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம். அதிக உடல் எடை, பி.சி.ஓ.எஸ்., ஏற்பட மற்றொரு முக்கிய காரணமாகும்.

அதிக உடல் எடையுடன் இருந்தால், அதிகப்படியான கொழுப்பு, இன்சுலின் சுரப்பிற்கு எதிராக செயல்பட்டு, மேலும் எடை அதிகரிக்க வழி செய்யும். இதை சரி செய்வதே, சிகிச்சையின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக, நீடித்த ரத்தப்போக்கு, குழந்தையின்மை, முகம் மற்றும் உடம்பில் தேவையற்ற முடி, பலவீனமான தலைமுடி, முடி உதிர்வது, முகப் பருக்கள் போன்றவை.

இதனுடன் தொடர்பு டைய பிற உடல்நலப் பிரச்னைகளான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, சர்க்கரை கோளாறுக்கு முந்தைய நிலை, அதிக கொழுப்பு, கல்லீரலில் கொழுப்பு படிவது, துாக்கத்தில் மூச்சுத்திணறல், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் 'எண்டோமெட்ரியல்' கேன்சர் வரலாம்.

இப்பிரச்னையால் கரு தரிக்க முடியாத பெண்களுக்கு கருப்பையைத் துாண்டுவதற்கும், குழந்தையின்மைக்கு சிகிச்சையளிப்பதற்கும், கருவுறுதலுக்கான மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. சிகிச்சையின் முதல் நிலை எடை குறைப்பு. எடை குறைப்பால் இன்சுலின் எதிர்ப்பு குறைந்து, கரு முட்டை முதிர்ச்சி அடைகிறது; கருவுறுதலை சீராக்குகிறது.

பி.சி.ஓ.எஸ்., பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆரோக்கியமான கருவுறுதலுக்கு உதவும் கருவுறுதல் சிகிச்சைகள் பல உள்ளன. அவரவர் உடல் நலனுக்கேற்ற சிகிச்சையை, கருவுறுதல் மருத்துவத்தில் அனுபவம் பெற்ற டாக்டரிடம் ஆலோசனை பெற்று செய்தால், பிரச்னைக்கு சுலபமாக தீர்வு கிடைக்கும்.

டாக்டர் ரம்யா பிரவீன் சந்தர், மகப்பேறு மருத்துவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us