தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/நெல்லியில் என்ன ரகசியம் இருக்கு?

நெல்லியில் என்ன ரகசியம் இருக்கு?

நெல்லியில் என்ன ரகசியம் இருக்கு?


PUBLISHED ON : பிப் 18, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லி, உடலுக்கு இளமை தரும் ஓர் ஒப்பற்ற கனி. நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என்று கூறுகின்றனர். நெல்லியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக, இக்கனி பயன்படுத்தப்

படுகிறது. காயகல்பம் இக்கனியில் இருந்து தான், உருவாக்கப்படுகிறது. இதில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம்.

100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஆகியவை போதிய அளவு அடங்கியுள்ளன. பல் நோய், அஜீரணம், மூட்டுவலி மற்றும் பார்வை குறைபாட்டிற்கு ஏற்ற அருமருந்தாகும். நீண்ட ஆயுளுக்கு, நாளும் நெல்லிச்சாறு அருந்தினால், இதைப்போல் அருமருந்து வேறில்லை. பசியின்மையை விலக்கி, பசியை உணரவைக்கும்.

மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும். நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும். நெல்லியை காய வைத்தாலும், அதிலுள்ள வைட்டமின் சி சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது, இந்த சக்தி அதிகரிக்கிறது. முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்

கனிக்கு உண்டு என்பது மருத்துவ கூற்று. நவீன ஆராய்ச்சி மூலமும் இதை உணர வைத்திருக்கின்றனர்.

ஆண்டி ஆக்சிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி, நோய் நொடிகளிலிருந்து உடலைப் பாதுகாத்து. முதுமையை விரட்டி, உடலை நல்ல நிலையில், என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது. இது நெல்லிக்கனியில் மிகுந்த அளவு காணப்படுகிறது. பித்தத்தை குறைத்து, உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் தன்மை இக்கனிக்கு உண்டு. ஆப்பிளை விட3 மடங்கு புரதச் சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

இருதய வால்வுகள், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது. கார்போஹைட்ரேட், நார் சத்து, இரும்பு சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும். நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால், கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய், மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து, காலை, மாலை வெந்நீரிலோ அல்லது தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி இளமையுடன் இருக்கலாம். நெல்லி வற்றல், பச்சை பயிறு, வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு, 200 மி.லி.,யாகக் காய்ச்சி வடித்து, 100 மி.லி., என காலையும், மாலையும் அருந்தி வந்தால், தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us