sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

எடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

/

எடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

எடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

எடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?


PUBLISHED ON : மார் 22, 2015

Google News

PUBLISHED ON : மார் 22, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விரும்பிய உணவையெல்லாம் விரும்பிய நேரங்களில், விரும்பிய அளவுகளில் சாப்பிட்டு, சாப்பிட்டு இன்று பலர் உடல் எடையுடன் காணப்படுகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் தாக்குவதால், ஆண், பெண் இருவருக்கும் இன்று உடல் எடையை குறைப்பதுதான் சவால் ஆக உள்ளது.

ஆனால் வேறு சிலர், எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறோமே, எப்படி குண்டாவது என புலம்பியபடி இருக்கின்றனர். உணவு பழக்க வழக்கங்களால் மட்டுமே, உடல் எடையை அதிகரிக்க முடியும். கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை சாப்பிடுவதன் வாயிலாக, கட்டாயம் உடல் எடையை அதிகரிக்க முடியும். வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட்டுடன் தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான, 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.

அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரியும். அத்தகைய முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடை அதிகரிக்கும். அனைவரும் வெண்ணெயை தினமும் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான். ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது.

உடல் ஆரோக்கியமாகவும், எடை அதிகரிக்கவும், சில பவுண்ட் உடலுக்கு தேவைப்படுகிறது. ஆகவே, தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும். தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பாண் வாங்கும் போது, கோதுமை பாணினை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.

காலையில் சாப்பிட ஓட்ஸ் மிகவும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் சீரான ரத்த ஓட்டம் இருப்பதோடு, உடலும் பருமனடையும். பழங்களை விட தயிரில், 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும். வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்ல, குறைந்தது, 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.

கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.






      Dinamalar
      Follow us