sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுகிறது ஏன்?

/

உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுகிறது ஏன்?

உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுகிறது ஏன்?

உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுகிறது ஏன்?


PUBLISHED ON : செப் 05, 2010

Google News

PUBLISHED ON : செப் 05, 2010


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.ஆறுமுகம், செங்கல்பட்டு: என் வயது 64; எடை 65.6 கி.கி., சர்க்கரை, ரத்த அழுத்தம் கிடையாது. கடந்த 10 வருடங்களாக உடம்பில் நமைச்சல் உள்ளது. மாதத்திற்கு ஒருமுறை நான்வெஜ் சாப்பிடுவேன். இடது பக்க முதுகு தொடர்ந்தும், காலில் விட்டு விட்டு வந்த அரிப்பு, இப்போது உடல் முழுவதும் உள்ளது. சீப்பு அல்லது சுவரில் தேய்ப்பதால் உடல் முழுவதும் கண்டு கண்டாக தடித்து விடுகிறது. ஆங்கில, நாட்டு, சித்தா வைத்தியங்கள் செய்தும் பலனில்லை. மேலும், வெயில் காலத்தில் வியர்வை வந்தவுடன் அரிப்பு எடுக்கிறது.



அரிப்பு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன; இது தான் என குறிப்பிட்டுக் கூறுவது கடினம். உங்கள் சருமம் உலர் தன்மை கொண்டதாக இருக்கலாம். வயது ஏறும் போது இத்தகைய உபாதைகள் தலை தூக்கும். குளிக்கும் போது மாய்ஸ்சரைசிங் சோப்பு அல்லது குளித்த பின் பேபி ஆயில் தடவிக் கொண்டால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

நீங்கள் சாப்பிடும் உணவு வகைகளில் ஏதாவது ஒன்று, உங்களுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். பலருக்கும் வேர்க்கடலை ஒவ்வாமையாக இருக்கும். வேர்க்கடலை நேரடியாக சாப்பிடவில்லை என்றாலும், அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், அதன் மாவு ஆகியவை, சில உணவு வகைகளில் சேர்க்கப்படுகின்றன. அவையும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.



நீரிழிவு நோய், தைராய்டு பிரச்னை, கொலஸ்ட்ரால், வெகு அரிதாக சில வகை ரத்தப் புற்றுநோய் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்தும். அலோபதி மருந்து சாப்பிட்டு, அதில் குணமாகவில்லை என சித்தா மருந்துக்கு மாறுவது, அது சரியாகவில்லை எனில், வேறு மருத்துவமுறைக்கு மாறுவது எனச் செல்வது நல்லதல்ல; தீர்வும் அல்ல. அரிப்புக்கு சரியான காரணத்தை கண்டுபிடித்து, அதை சரியான முறையில் குறைப்பது தான் ஒரே தீர்வு.



ஏ.ராமதாஸ், திண்டுக்கல்: 61 வயதான எனக்கு, 30 வருடங்களாக டைப்-2 சர்க்கரை நோய் காரணமாக, மாத்திரை எடுத்துக் கொள்கிறேன். கடந்த இரண்டரை வருடங்களாக முகம் மற்றும் தோள்பட்டை, கைகளில் தடிப்பு தடிப்பாக வந்து சிவப்பாகி விடுகிறது. ஒன்றரை ஆண்டாக ஆங்கில மருந்து எடுத்து சரியாகாததால், சில மாதங்களாக ஓமியோபதி மருந்து உட்கொள்கிறேன். சரியானாலும், சிறிது நாள் கழித்து தடிப்பு வந்து விடுகிறது; அரிப்பு இல்லை. இதற்கு சரியான மருத்துவம் என்ன? எதனால் வருகிறது?



உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்து, அதற்காக மருந்து சாப்பிடும் போது, வேறு உபாதைகளுக்காக ஓமியோபதி மருந்தும் சாப்பிடுவது பலன் தராது. இரு மருத்துவமுறைகளும் ஒன்றுக்கொன்று இணக்கமானதல்ல. தோல் நோய் நிபுணரிடம் ஆலோசனை பெற்று, தடிப்பு ஏற்படும் இடத்திலிருந்து தோல் எடுத்து, பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும். அறிவியல் பூர்வமான பரிசோதனையில், நோய்க்கான உண்மையான காரணம் தெரிந்து விடும். அதனடிப்படையில் மருந்து சாப்பிடலாம்.



ஏ.ராம், தேனி: கடந்த 5 வருடங்களாக, 'ப்ராஸ்டேட்' சுரப்பி வீக்கத்திற்காக, 'வெல்டாம்-எப்' மாத்திரை எடுத்து கொள்கிறேன். மாத்திரையை நிறுத்தி விட்டால், ஓரிரு நாளில் சிறுநீர் கழிப்பதில் சிரமமாக உள்ளது. இந்த மாத்திரை வாழ்நாள் முழுவதும் எடுத்து கொள்ள வேண்டுமா அல்லது வேறு வழி ஏதேனும் உள்ளதா?



புற்றுநோய் அல்லாத, 'ப்ராஸ்டேட்' வீக்கத்திற்கு, 'வெல்டாம்-எப்' மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. 40 வயதான ஆண்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்படும். வீக்கம் ஏற்படும் போது, சிறுநீர் பையிலிருந்து சிறுநீர் வெளியேறுவது தடைபடும்.

இது போன்ற மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், அறுவை சிகிச்சை ஒன்று மட்டுமே தீர்வாக இருந்தது. மாத்திரை சாப்பிடும் போது, 'ப்ராஸ்டேட்' சுரப்பி, வீக்கமின்றி இருக்கும். மாத்திரையை நிறுத்தினால், மீண்டும் வீக்கம் ஏற்படும். இதனால் தான் உங்களால் சிறுநீர் செல்ல முடிவதில்லை. மாத்திரை தொடர்ந்து சாப்பிட முடியவில்லை எனில், அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.








      Dinamalar
      Follow us