PUBLISHED ON : மே 06, 2012

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொ. ராஜபாண்டி, மதுரை: எனக்கு, இரண்டு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக, 'Glimepride' மற்றும் 'Pioglitazone' ஆகிய மாத்திரைகளை எடுத்து வருகிறேன். இதனால் சர்க்கரை நோய் வந்ததில் இருந்து, உடற்பயிற்சி செய்தும், என் எடை அதிகரித்து வருகிறது. நான் என்ன செய்வது?
'உங்களுக்கு எடை அதிகரிக்க சர்க்கரை நோய் காரணமல்ல. நீங்கள் எடுக்கும் 'Pioglitazone' மாத்திரையே. எனவே, உங்கள் டாக்டரிடம் கலந்து ஆலோசித்து, அந்த மாத்திரையை நிறுத்திவிட்டு, சர்க்கரை நோய்க்கு வேறு மாத்திரையை எடுத்துக் கொள்வது நல்லது.
- டாக்டர் விவேக் போஸ், மதுரை.

