sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/மாரடைப்பை விட மோசமானது

மாரடைப்பை விட மோசமானது

மாரடைப்பை விட மோசமானது


PUBLISHED ON : நவ 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நுரையீரல் அடைப்பு என்பது என்ன?

ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால், இதயம் செயலிழப்பதை மாரடைப்பு என்கிறோம்; காற்று மாசால், சுவாசப் பைகள் கடினமாகி, சுவாச செயலிழப்பு ஏற்படுவது நுரையீரல் அடைப்பு எனப்படும்.

காற்று மாசால் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

மார்பு கூட்டின் இரு பக்கத்திலும், காற்று அடைத்த ஸ்பாஞ்ச் பைகள் போன்ற அமைப்பு தான் நுரையீரல். அதன் சுவாச குழாய் மற்றும் அதிலிருந்து பக்கவாட்டில் பிரியும் குழாய்களில், மரக்கிளைகளில் தொங்குவது போன்று, காற்று அடைத்த சிறிய சிறிய சுவாச பைகள் இருக்கும். கார்பன் உட்பட மாசடைந்த காற்றில் உள்ள வாயுக்கள், நுண்ணிய துகள்கள், இந்த பைகள் மற்றும் சுவாசப் பாதையில் அடைத்து, அந்த பாதையை குறுகலாக்கி விடும்.

தொடர்ந்து, இது போல மாசடைந்த காற்றையே சுவாசித்தால், சுவாச குழாயின் பாதை சுருங்கி, சுவாச குழாய், நுரையீரல் மொத்தமும் கடினமாகி விடும்.இதனால், சிரமப்பட்டு சுவாசிக்க வேண்டியிருக்கும். மூச்சு வாங்குவது, மூச்சு விட முடியாமல் தவிப்பது, மூச்சற்ற நிலையும் ஏற்படலாம்.இதற்கு முக்கிய காரணம், நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டு, கார்பன் கலந்த காற்று அதிகம் செல்வது தான் ஒரு முறை.மாரடைப்பு ஏற்பட்டாலாவது, குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவ உதவி கிடைத்தால், இதயத்தை பழைய ஆரோக்கியமான நிலைக்கு கொண்டுவர முடியும்.

ஆனால், நுரையீரல் அடைப்பு ஏற்பட்டால், பழைய நிலைக்கு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. நுரையீரலில் அடைப்பு இருப்பதை, ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால், பிரச்னை மேலும் மோசமாகாமல் தடுக்க முடியும்.

காற்று மாசு எவ்வாறு ஏற்படுகிறது?

வாகனங்கள் கக்கும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, தோல் தொழிற்சாலை கழிவுகள் போன்றவற்றில் இருந்து வரும் கார்பன் மோனாக்சைடு, சல்பர் - டை - ஆக்சைடு போன்ற வாயுக்கள் தவிர, மகரந்த துகள்கள், கட்டுமான தளங்களில் இருந்த வரும் துகள்கள், காற்றில் கலந்து மாசை ஏற்படுத்துகின்றன.

நுரையீரல் அடைப்பின் அறிகுறிகள்?

இருமல், சுவாசிப்பதில் சிரமம், தும்மல், மூச்சிரைப்பு, நெஞ்சு பகுதியில் வலி, மூச்சுத் திணறல் போன்றவை பொதுவான அறிகுறிகள்.

நுரையீரலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்ன?

இதயமும், நுரையீரலும் ஓய்வே இல்லாமல் இயங்கிபடி இருப்பவை. இந்த இரு உறுப்புகளும், ஒரு நிமிடமும் நிற்காமல் வேலை செய்கிறது என்பதை, நாம் உணர்வதே இல்லை.எப்போது பிரச்னையாகி, நெஞ்சு பகுதியில் வலி வருகிறதோ அப்போது தான், இதயம் இருப்பதை உணர்கிறோம். அது போல, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் மட்டும், நுரையீரலை நினைக்கிறோம்.சுவாசப் பயிற்சி, வீட்டைச் சுற்றி பசுமையான தோட்டம் என, எவ்வளவு பாதுகாப்பாக நாம் வாழ்ந்தாலும், சுற்றுப்புறத்தில் காற்று மாசு ஏற்பட்டால், நுரையீரல் பாதிப்பை தடுக்க முடியாது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவது, பொது போக்குவரத்தை அதிகம் உபயோகிப்பது, புகை, மாசு இல்லாமல், நம் சூழலை பராமரிப்பது, முடிந்த அளவு மரங்களை வளர்ப்பது என, தனி நபரும், அரசும் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே, காற்று மாசிலிருந்து நுரையீரலை காக்க முடியும்.கடந்த சில வாரங்களாக, டில்லியைப் போலவே சென்னை யிலும் காற்று மாசு அதிகரித்து உள்ளது. வெளியில் செல்வோர், தற்காப்பிற்காக, தரமான முகக் கவசம் அணிந்து செல்லலாம்.

டாக்டர் ஆர். நரசிம்மன்

தலைவர், இந்திய சுவாச நோய் ஆராய்ச்சி அமைப்பு

89397 52803

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us