sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கர்ப்பிணிகளே...கவனம்...கவனம்

கர்ப்பிணிகளே...கவனம்...கவனம்

கர்ப்பிணிகளே...கவனம்...கவனம்


PUBLISHED ON : நவ 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி?

திருமணம் முடிந்த பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போனால் மகப்பேறு மருத்துவரை அணுகவேண்டும். சிறுநீர் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்வது தவறு. சிலருக்கு கருக்குழாயில் கர்ப்பம் தரித்து விடும். இதை இடமாறிய கர்ப்பம் என்பர். எனவே 'ஸ்கேன்' பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்வதே நல்லது. கர்ப்பம் தரித்ததில் இருந்து 28 வாரம் வரை மாதம் ஒரு முறை, 36 வாரம் வரை 15 நாளுக்கு ஒரு முறை, 40 வாரம் வரை 7 நாளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்வது அவசியம்.

கர்ப்பிணிக்கு ரத்தசோகை ஏற்படாமல் இருக்க என்ன செய்வது?

இரும்புச்சத்து அதிகமுள்ள கீரை, பேரீச்சம்பழம், வெல்லம், பருப்பு வகைகளை சாப்பிடலாம்.இவற்றை விட மாமிச உணவான ஈரல், மீன்களில் அதிக இரும்பு சத்து உள்ளது. இது தவிர போலிக் ஆசிட் சத்து மாத்திரையோடு, கால்சியம் மாத்திரையும் எடுத்தால், ரத்தசோகையை தவிர்க்கலாம்.

கர்ப்பிணிகளில் 48 சதவீதம் பேர் ரத்த சோகை, 42 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்த பிரச்னைக்கு உள்ளாகின்றனர். இதை குறைக்க தான் இரும்பு சத்து மாத்திரைகளை சிறுவயதில் இருந்தே வழங்குகின்றனர்.

ரத்த கொதிப்பு அதிகரித்தால் என்ன செய்வது?

கர்ப்பிணிக்கு தலைவலி, கண்பார்வை மங்குதல், வயிற்றுவலி, கால் வீக்கம், அதிக ரத்த கொதிப்பு இருந்தால் உடனே டாக்டரிடம் தீர்வு காண வேண்டும். அதிக ரத்த கொதிப்பு இருந்தால் டாக்டர் பரிந்துரைத்த மாத்திரை எடுக்கலாம். மாத்திரை எடுக்காமல் விட்டுவிட்டால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இருதயநோய் இருந்தால்?

இருதய நோய் உள்ள கர்ப்பிணிக்கு அடிக்கடி மூச்சுத்திணறல், படபடப்பு, கால்வீக்கம் ஏற்படலாம். இப்பிரச்னை உள்ளவர்கள் கர்ப்பம் தரித்ததில் இருந்து 36 வது வாரத்தில் நேரடியாக அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை (சீமாங்க் சென்டர்) மையத்தில் 'அட்மிட்' ஆவது நல்லது.

சர்க்கரை நோய் வருமா?

கர்ப்பிணிகளுக்கு உடலில் சில ஹார்மோன்களில் மாறுதல் ஏற்படும். அப்போது சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. முந்தைய பிரசவத்தில் எடை அதிகமாக குழந்தை பிறந்திருந்தாலோ அல்லது குறைபாடுள்ள குழந்தை பிறந்திருந்தால், அடுத்த பிரசவத்தின் போது சர்க்கரை நோய் ஏற்படலாம்.

சர்க்கரை நோய் இருப்பின் குழந்தையை பாதிக்குமா ?

கருவில் இருக்கும் குழந்தையின் எடை அதிகரித்து, சுகப்பிரசவத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும். பிறக்கும் குழந்தைக்கும் இருதயம், மூளை, சிறுநீரக குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே சர்க்கரை நோய் வராமல் இருக்க உணவில் சர்க்கரையை தவிர்க்கவும். கிழங்கு வகைகளையும் தவிர்க்கவும். மா, பலா, வாழை பழங்களில் அதிகளவில் சர்க்கரை சத்து இருப்பதால் அதை தவிர்த்து, புரத சத்துள்ள முட்டை, மீன், பருப்பு வகைகள், கீரை, நார்ச்சத்து காய்கறிகள், ஆப்பிள், கொய்யா, நாவற்பழம் சாப்பிடலாம்.

-டாக்டர். எஸ்.மல்லிகா

மகப்பேறு மருத்துவர்

சிவகங்கை.

63824 29638

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us