
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்முறை:
1. விரிப்பில் அமர்ந்து பத்மாசன நிலைக்கு வர வேண்டும்
2. பின் நன்றாக மூச்சை வெளிவிட்டு நமஸ்கார நிலைக்கு வர வேண்டும்
3. பின் மூச்சை இழுத்துக் கொண்டே, கைகளை மேலே உயர்த்தி, மெதுவாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டே முன்னால் குனிந்து, தரையை நெற்றி தொட வேண்டும்
4. பின் இரு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று, உள்ளங்கைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
5. சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், ஆரம்ப நிலைக்கு வரவேண்டும்.
பலன்கள்:
1. மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்
2. ஜீரண சக்தியை அதிகரிக்கும்
3. குடல் இறக்கப் பிரச்னைக்கு நல்ல தீர்வு
4. வயிற்றின் அதிகப்படியான சதையை குறைத்து, உடல் எடையை குறைக்கும்
5. பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வு.
- ரா.சுதாகர், திருமூலர்
பிரபஞ்ச யோகா மையம்,
சென்னை. 97909 11053

