sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தயிர்

/

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தயிர்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தயிர்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தயிர்


PUBLISHED ON : ஏப் 22, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 22, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படர்தாமரை வராமல் தடுக்கும் வழிமுறைகள்?

மனித உடலில் 'டீனியா' என்ற பூஞ்சையால் ஏற்படும் தோல் நோய் படர்தாமரை. இதன் அறிகுறி உடலில் சிவந்த படைகள் ஏற்படும். உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதமுள்ள இடங்களில் விரைந்து பரவும். தலை, அக்குள், தொடைஇடுக்குகள் மற்றும் பாதத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். தலையில் படர்தாமரை தாக்கினால் வழுக்கை திட்டு ஏற்படும்.

படர்தாமரை நகங்களை பாதிக்கும்போது நகம் நிறமாறி எளிதில் உடையும். அக்குள் மற்றும் தொடை பகுதிகளில் அரிப்பு ஏற்படுத்தும். இது பரவும் தொற்றுநோய். இந்நோய் பாதித்தவர்களின் சீப்பு, முகச்சவர உபகரணம், ஆடை, கழிவறை, குளியலறை, நீச்சல்குளம் மூலம் மற்றவர்களுக்கு பரவும். சுய சுத்தம் குறைவாக உள்ளோர், உடல் பருமன், நீரழிவு உள்ளோர், ஊட்டச்சத்து குறைபாடு, மக்கள் நெருக்கடியுள்ள இடங்களில் வசிப்போர், நீரில் அதிகம் புழங்குவோருக்கும் படர்தாமரை பாதிப்பை ஏற்படுத்தும்.தோல், நகம், தலைமுடியை சுத்தமாக வைத்தால் படர் தாமரையை தவிர்க்கலாம்.

பெண்களுக்கு வரும் மார்பக கட்டி பாதிப்பு தருமா?

பெண்களுக்கு மார்பில் கட்டி தோன்றினால் புற்றுநோய் என்ற பயம் வேண்டாம். ஆனால் எல்லா மார்பக கட்டிகளும் புற்று நோய் இல்லை. சாதாரண கட்டிகளும் மார்பகத்தில் தோன்றும். அதில், 'பைப்ரோ அடினோமா' என்னும் தசைநார் கட்டி மார்பில் தோன்றியுள்ள கட்டி எவ்வகையானது என்பதை துவக்கத்திலேயே பரிசோதனை செய்வது அவசியம். இக்கட்டிகள் 'ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்' காரணமாக உண்டாகிறது. இக்கட்டி ரப்பர் போன்ற தன்மையுள்ளது. தோலுக்கு அடியில் எளிதாக நகரும், வலிஏற்படாது. பெண்கள் வயதுக்கு வந்த பின்னும், இளம் பெண்களுக்கும் இதுபோன்ற கட்டி தோன்றலாம். அதுபோன்று கர்ப்ப காலம், பாலுாட்டும் காலத்திலும் இக்கட்டி பெரிதாகி, தானாக குறையலாம். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை.

தயிர் சாப்பிடுவது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா?

தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. இவை பலவகை இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்க்கிருமியை அழிக்கிறது. வயிற்று போக்கை தடுக்கும் ஆற்றலும் உண்டு. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.

தினமும் தயிர் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும். பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட தயிரில் அதிகளவு கால்சியம் உண்டு. எனவே தயிரை உண்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும். எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதும் தடுக்கப்படும்.

அடிக்கடி தலைவலி வந்தால் என்ன செய்வது

தொடர்ந்து 'டிவி', அலைபேசி, கம்ப்யூட்டர் பார்த்தால் தலைவலி உண்டாகும். ரத்த நாளங்களை அழுத்தமாக துடிக்க செய்கிற, தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய சூரியஒளியை கண்டால் அதிகரிக்கிற தலைவலியை ஒற்றைத் தலைவலி என்கிறோம்.

பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்னர் தலைவலி வரும். பருவநிலை மாற்றம், வெயில், வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற காரணத்தால் அடிக்கடி தலைவலி ஏற்படும்.

ஆனால் அப்போதைக்கு தலைவலி நிவாரணி அல்லது மாத்திரை சாப்பிடுவதோடு விட்டு விடுகிறோம். வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கும்.

கிராம்பு, சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டால், சூடு காரணமாக ஏற்படும் தலைவலி குறையும். சிறிது இஞ்சி, சீரகம், மல்லியை தண்ணீரில் போட்டு, 5 நிமிடம் கொதிக்க வைத்து, டீ போல் தயாரித்து வடிகட்டி அருந்தினால், தலைவலியை போக்கலாம்.

-டாக்டர். மதுமிதா, ஓமியோபதி மருத்துவர்

மதுரை. 89392 66767






      Dinamalar
      Follow us