sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

இன்ஸ்டா ரீல்ஸ்சில் தீர்வு தேடும் இளம் பெண்கள்!

/

இன்ஸ்டா ரீல்ஸ்சில் தீர்வு தேடும் இளம் பெண்கள்!

இன்ஸ்டா ரீல்ஸ்சில் தீர்வு தேடும் இளம் பெண்கள்!

இன்ஸ்டா ரீல்ஸ்சில் தீர்வு தேடும் இளம் பெண்கள்!


PUBLISHED ON : டிச 01, 2024

Google News

PUBLISHED ON : டிச 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகை விடவும் ஆரோக்கியம் தான் முக்கியம். ஆரோக்கியமாக இருந்தால் அழகாகத் தெரிவோம். தற்போதைய காலகட்டத்தில் அழகுக்காக ஆரோக்கியத்தை சமரசம் செய்கின்றனர் என்று எனக்கு தோன்றுகிறது.

இளம் வயதினர் பலரும், பிரபலங்களின் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், அவர்கள் சொல்லும் 'டிப்ஸ்'களை பார்த்து, அதை அப்படியே பின்பற்றுகின்றனர். அவர்கள் சிபாரிசு செய்யும் தோல் டாக்டரிடம் செல்கின்றனர். இது மிகவும் தவறு.

ஒரு டாக்டரின் தகுதி, திறமை, அனுபவத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, சினிமா நட்சத்திரங்கள் அவரிடம் செல்வதை மட்டுமே தகுதியாக கருதக்கூடாது. நான் சொல்லும் இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு வரலாம் என்று தெரிந்தும் வெளிப்படையாக சொல்கிறேன். நடிகை நயன்தாரா, சென்னை எழும்பூரில் உள்ள தோல் டாக்டரிடம் ஆலோசனை பெறுவதாக தன் 'இன்ஸ்டா' பக்கத்தில் சொல்லியிருப்பதைப் பார்த்து, என்னிடம் ஆலோசனைக்கு வரும் பல இளம் பெண்கள் அந்த டாக்டரிடம் சென்றதில், பலருக்கும் ஏற்கனவே இருந்த பிரச்னை இன்னும் மோசமாகி விட்டது.

அது போல, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனை தோல் டாக்டர் ஒருவரிடமும், அவர் பிரபலம் என்பதற்காகவே பலரும் சென்றதால் பாதிப்பு அதிகரித்தது. நோயாளிகளை மிக மோசமாக நடத்துவதையும் பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

பல நேரங்களில் தங்களின் 'கிளினிக்'கை விளம்பரம் செய்வதற்காக நடிகையரிடம் பணம் கொடுத்து, 'ரீல்ஸ்' செய்யச் சொல்வர். அந்த டாக்டரிடம் இவர்கள் சிகிச்சை செய்திருக்கவே மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனக்கு நடிகை வாணி போஜனை பிடிக்கும். அதனால், நான் அவரை அழைத்து, குறிப்பிட்ட தொகை கொடுத்து, என் கிளினிக்கை பிரபலப்படுத்தலாம். அதற்காக அவர் என்னிடம் தான் ஊட்டச்சத்து ஆலோசனை பெறுகிறார் என்பது பொய். கிரிக்கெட் நட்சத்திரங்கள் விராட் கோலி, தோனி என்று எனக்கு பிடித்த நபரை அழைத்து, என் கிளினிக்கை பற்றி பேச வைக்கலாம்.

அதுபோல, இன்ஸ்டாகிராமில் ஆர்.ஜே., - வி.ஜே., குடும்பத் தலைவி என்று பலரும் முகம் பளபளக்க, தோல் கண்ணாடி மாதிரி தெரிய, பல சரக்கு, காய்கறி, பழம் என்று அரைத்து, பிசைந்து பயன்படுத்த சொல்லி டிப்ஸ் தருகின்றனர்.

இதையும் அப்படியே பின்பற்றக்கூடாது. அவர்கள் யார்? தகுதி உள்ளதா என்று பார்க்க வேண்டும். மாதவிடாய் பிரச்னை என்றால், ஒரு மகப்பேறு டாக்டர் சொல்வதை தான் கேட்க வேண்டுமே தவிர, இன்ஸ்டா ரீல்சில் தீர்வு தேடக்கூடாது.



திவ்யா சத்யராஜ்,

ஊட்டச்சத்து நிபுணர்,

சென்னை.

98400 27680

divyasathyaraj7@gmail.com






      Dinamalar
      Follow us