
தோலில் பல அடுக்குகள் உள்ளன. மேல் தோலில் உள்ள 'எபிடெர்மிஸ்' என்ற அடுக்கு வயதாவது ஒரு விதமாகவும், அதன் கீழ் அடுக்கில் இருக்கும் 'டெர்மஸ்' என்ற அடுக்கும், கொழுப்பும் வேறு விதமாக முதுமை அடையும்.
இப்படி தோல் முதுமை அடைவதால் தான், வயதானவர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. தோல் வயதாவதை, சுருக்கங்கள் விழுவதை பல விதங்களில் தாமதப்படுத்த முடியும்.
இதில் முக்கியமானது உணவு பழக்கம். அடுத்தது, தற்போதுள்ள மாசுக்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்க தினமும் 'சன் ஸ்கிரீன்' பயன்படுத்தினாலே, மாசுக்களால் ஏற்படும் சிதைவை தடுக்கலாம்.
தோலின் உள்ளடுக்குகளில் ஏற்படும் முதுமையை தடுக்க, உதாரணமாக தோல் இறுக்கமாக இல்லாமல் தளர்வாக இருப்பதை தவிர்க்க, முறையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். வழக்கமான உணவுப் பழக்கத்தை மாற்றி, வேறு உணவுப் பழக்கத்தை பின்பற்றினால், உடல் எடை குறையும். விரைவாக தோல் முதுமை அடையும்.
ஆன்டி ஆக்சிடென்ட் அதிகமுள்ள பழங்களை தினமும் உணவில் சேர்ப்பதால், ஆக்ஸ்சிடேடிவ் ஸ்ட்ரெஸ்சால் தோலில் ஏற்படும் சிதைவுகளை தடுக்கலாம்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மாவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வெளிவரும் உணவுகளில், நீண்ட காலம் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் நச்சுப் பொருட்களால் தோல் விரைவில் முதுமை அடையும்.
விட்டமின் ஏ, பி, இ குறைபாடு வந்தால், தோலில் வறட்சி ஏற்படும். விட்டமின் டி, ஜிங்க் குறைபாடு இருந்தால் வாய் புண் அடிக்கடி வரும். சிலருக்கு வாய்க்கு உள்ளே, மாதம் ஒருமுறை வாய்ப்புண் வருவதற்கு இது தான் காரணம்.
தோலுக்கு விட்டமின் சி இருக்கும் ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி, திராட்சை, கொய்யா மிகவும் நல்லது. விட்டமின் சி சத்து அதிகமாக உட்கொள்வதால், நச்சுத்தன்மை எதுவும் வராது.
டாக்டர் கே.ஆர்.ஷர்மதா,
தோல் மருத்துவர், சிம்ஸ் மருத்துவமனை,
சென்னை
044 - 2000 2001
enquiry@simshospitals.com