PUBLISHED ON : ஜூலை 26, 2024 12:00 AM


ஆனால் இந்த வெற்றிக்கு நம் இந்திய வீரர்கள் 527 பேரை பலிகொடுத்தோம்,1,363 வீரர்கள் காயமடைந்தனர்.இதன் காரணமாக கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடும் தினமாக அல்லாமல் நாட்டிற்காக பலியான வீரர்களின் நினைவை போற்றும் தினமாக கடைபிடித்து வருகிறோம்.
கார்கில் போர் பற்றி இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
இந்தியா-பாக் பிரிவினைக்கு பின் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டின் படி கார்கில் நகரம் இந்திாவின் ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியுடன் இணைக்கப்பட்டது.
மிக மிக குளிர் நிலவும் பகுதி என்பதால் கார்கில் பகுதியில் மிதமான வெப்பம் நிலவும் போது மட்டும் இந்திய துருப்புகள் ரோந்து செல்லும் மற்ற நேரங்களில் செல்லாது,இதைக் கண்காணித்துவந்த பாக்.படையினர் கொஞ்சம் கொஞ்சமாக ஊடூருவி இந்தியா எல்லையை ஆக்ரமித்தனர்.
இதுபற்றி தெரிந்ததும் ஒரு சிறிய இந்திய படையினர் விசாரிக்கச் சென்றனர் அப்படிச் சென்றவர்களை சிறைப்பிடித்து மிகக் கொடூரமாகக் பாக்.படையினர் கொண்றனர்.
விஷயம் விபரீதமாக இருக்கிறது என்பது தெரிந்ததும் மீ்ண்டும் ஒரு பெரிய படை சென்ற போதுதான் தெரிந்தது நீண்ட துாரத்திற்கு பாக்.ஊடுருவி இருந்தது.
அவர்களை வெளியேற்றும் முயற்சியாக தொடங்கியது கார்கில் போர்.
இந்தியா நினைத்தது போல போர் அவ்வளவு எளிதாக இல்லை மண்ணாசை பிடித்த பாக்.படையினரால் நிறைய உயிரிழப்புகள் நிகழ்ந்தது.
அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வான் படையை முடுக்கிவிட்டார் அதன்பிறகுதான் பாக்.படையினரின் கொட்டம் அடங்கியது.
பாக்.படை கொஞ்சம் பின் வாங்குவது நடிப்பாக இருக்கலாம் விடாதீர்கள் கடைசி எல்லைவரை விரட்டி அடியுங்கள் என்று பிரதமர் உத்திரவிட்டார்.
பாக்.கில் பெரிய அளவில் இழப்புகள் ஏற்பட்டதும் அமெரிக்காவின் உதவியை தேடி ஒடியது .
அப்போது அமெரிக்க அதிபராக இருந்த கிளிண்டன் நடந்தது எல்லாம் எனக்குத் தெரியும் முதலில் ஆக்ரமிப்பு பகுதியை விட்டு வெளியேறுங்கள் அதுதான் உத்தமம் என்று பேசமறுத்து அறிக்கை சமர்ப்பித்தார்.
நெருக்கடியின் உச்சத்தில் தனது தோல்வியை ஒத்துக் கொண்டு கார்கிலை முழுவதுமாக காலி செய்துவிட்டு பாக்,வெளியேறியது, அது வெளியேறியது என்பதை விட நம் வீரர்கள் தீரத்துடன் போரிட்டு வெளியேற்றனர் என்பதே சரியானது.
அந்த நாளை இறந்த மாவீரர்களின் நினைவு தினமாக பல ஆண்டுகள் கடைப்பிடித்து வருகிறோம்,இன்று அந்த நாளுக்கு 25 ஆண்டுகளாகிவிட்டது,போர் தீவிரமாக நடைபெற்ற திராஸ் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்திற்கு பிரதமர் சென்று மரியாதை செலுத்திவிட்டு வந்தார்.
நாம் நம் மனதால் என்றும் நம் வீரர்கள் நினைப் போற்றி மரியாதை செலுத்துவோம்
ஜெய்ஹிந்த்!
-எல்.முருகராஜ்

