PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

ருக்மணி தேவி
மதுரையைச் சேர்ந்த தேசபக்தரும், சங்கீத வித்தகருமான நீலகண்ட் சாஸ்திரியின் மகளாக பிறந்தவர்.பிறந்தது 1904 ஆம் ஆண்டு, மறைந்தது 1986 ஆம் ஆண்டு.
தான் வாழ்ந்த 82 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார், குறிப்பாக சாதாரண நடனம் என்று கருதப்பட்ட பரதநாட்டியத்தை சீரமைத்து புடம்போட்டு புத்துயிர் கொடுத்து அதை உலகமெங்கும் எடுத்துச் சென்று இன்று உயர்ந்த கலையாக வளர்ந்து நிற்பதற்கு உரமிட்டவர்.
நாட்டியமே வாழ்க்கை என்று வளர்ந்தவர் தியாசாபிகல் சொசைட்டியில் சேர்ந்து பல்வேறு மேலைநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார், தர்மம்,ஆன்மீகம்,பக்தி அடிப்டையிலான கதைகளை தேர்வு செய்து அதில் நாட்டிய நாடகத்தை அமைத்து நடனத்தை புதிய பாதை போட்டுத்தந்தார்.
பத்ம பூஷன் உள்ளீட்ட பல உயரிய விருதுகளை பெற்றாலும் பரதத்திற்கு உயிர்ப்பை கொடுத்து உயர்த்தியே தனது வாழ்க்கையின் பெரும் சாதனையாக கருதினார்.
-எல்.முருகராஜ்