PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM


தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில், தமிழக-கேரளா எல்லையில் உள்ளது.
இங்குள்ள பல தேயிலை தோட்டங்களில் 'வெண்ட்வொர்த் எஸ்டேட்டும்' ஒன்று.

யார் இந்த பழசிராஜா
17 ஆம் நுாற்றாண்டில் கோட்டயத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்.
வணிகம் செய்ய வந்து ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றி, நம்மவர்களுக்கே பலவித வரிகளை விதித்த கிழக்கிந்திய கம்பெனிகளின் நடவடிக்கைளை கடுமையாக எதிர்த்தவர் மன்னர் பழசிராஜா.
1793 ஆம் ஆண்டு முதல் 1805 ஆம் ஆண்டு வரை பலவிதங்களில் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்டார்.
இவர் இருந்த பகுதி மலையும் மலை சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள ஆதிவாசிகளின் துணையுடன் கொரில்லா போர் முறையைக் கைக்கொண்டு கம்பெனி படையை நடு நடுங்கச் செய்தார்,வில் அம்பு எய்து எதிரிகளை வீழ்த்துவதில் திறன் வாய்ந்த குரும்பா சமூகமும் கைகோர்த்தில் பழசிராஜா வெல்லமுடியாத வீரராக திகழ்ந்தார்.
ஒரு கட்டத்தில் பெரும் படையுடன் இவரை எதிரிகள் முற்றுகையிட்ட போது குகைகளின் வழியாக தப்பிச் சென்று வேறு வேறு இடங்களில் இருந்து போரைத் தொடர்ந்தார் இப்படி கிழக்கிந்திய கம்பெனிக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்த பழசிராஜா 1805-ஆம் ஆண்டு, அய்யன்கொள்ளி காட்டில் நடந்த போரின் போது வீர மரணமடைந்தார்.
பின்னாட்களில் இவர் கேரளாவின் சிங்கம் என போற்றப்பட்டார், இவரது வீரம் செறிந்த கதையை மையமாக வைத்து மம்மூட்டி கதாநாயகனாகக் கொண்டு வெளிவந்த 'கேரள வர்மா பழசி ராஜா' என்ற திரைப்படமும் அவரது புகழை மேலும் உயர்த்தியது.
இந்த நிலையில் அவர் போரடியதற்கு ஆதராமான இந்தக் குகை வெளிப்பட்டதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழசிராஜாவின் வீரத்தை பறைசாற்றும் இந்தக் குகையை பொதுமக்கள் பார்த்துச் செல்ல எஸ்டேட் நிர்வாகம் வழி அமைத்துது,பழசிராஜாவின் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த, அமெரிக்காவில் வசித்து வரும் கொச்சு தம்புராட்டி சுபா வர்மா, அவரது கணவர் டாக்டர் கிஷோர் ஆகியோர் நேரில் வந்து இந்த குகையினை திறந்து வைத்தனர், விழாவில் குரும்பா சமுதாயத்தை சார்ந்த கோவிந்தன்ஆசாரி, போரில் தனது தாத்தா பயன்படுத்திய வில் அம்புடன் பங்கேற்றார்,பழசிராஜாவின் சிற்பத்தை உருவாக்கிய சிற்பி பினுவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இனி இந்தப் பகுதிக்கு வரக்கூடிய (ஊட்டியில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது) சுற்றுலா பயணிகள் 31 ஆண்டுகள் போராடிய பழசிராஜாவின் குகையை பார்த்து ரசிக்கலாம்.
-எல்.முருகராஜ்
தகவல்,படங்கள்:பந்தலுார் ராஜேந்திரன்

