PUBLISHED ON : அக் 21, 2025 12:00 AM

நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருவிழாவுடன் இணைந்து ஒரு தனித்துவமான நிகழ்ச்சி நடைபெறுகிறது — அதுவே “குக்கூர் திஹார்” எனப்படும் நாய் வழிபாட்டு நாள்.
இந்த சிறப்பு நாளில், நேபாளத்தின் ஆயுத காவல் துறை வீரர்கள் தங்களது பணிநாய்களுக்கு பூமாலை அணிவித்து, குங்குமம் மற்றும் சந்தனத் திலகம் இட்டு, பூத்தூவி மரியாதை செலுத்தினர். அவர்கள் நாய்களுக்கு சுவையான உணவுகளை அளித்து, தங்கள் துணிச்சலான நம்பிக்கைத்துணைகளை ஆசீர்வதித்தனர்.அன்றைய தினம் அதன் சாகச நிகழ்ச்சிகளும் இடம் பெற்று பலரால் பாராட்டப்பட்டது.
அந்த நாள் முழுவதும் காட்மாண்டுவின் வீதிகள் வண்ணமயமான பூமாலைகள் அணிந்த நாய்களால் அலங்கரிக்கப்பட்டு வலம்வருகின்றன. அரசு துறைகளில் துறை அலுவலர்களாலும்,தனியார்களால் அவர்கள் வீடுகளிலும் நாய்களுக்கு சிறப்பு சடங்குகள் நடத்தப்படுகின்றன.
சமீபநாட்களாக தெரு நாய்கள் மீது கோபம் அதிகரித்துவரும் வரும் நிலையில் இந்த தகவல் சற்றே ஆறுதலைத் தருகிறது.
-எல்.முருகராஜ்