தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/மண்ணத்தான் திங்கணுமா?

மண்ணத்தான் திங்கணுமா?

மண்ணத்தான் திங்கணுமா?


PUBLISHED ON : நவ 25, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2026 08:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், புதுார், எட்டையபுரம் தாலுகா பகுதிகளில் மழையை மட்டுமே நம்பி, மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது.

இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், துரைச்சாமிபுரத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற 85 வயது விவசாயி ஒருவர் தனது நிலத்தில் நின்று மழை, தண்ணீர் இல்லை, அரசை நம்பி பயனில்லை என கண்ணீர் மல்க பேசியுள்ளார்

விவசாயி லட்சுமணன் பேசியதாவது

மேகம் கண்ணா மூச்சு காட்டுது, வெதச்சுட்டு வானத்தையும் , பூமியையும் பார்த்து சம்சாரி பெரு மூச்சு விடுறான்.

பயிர்க்கடன் கேட்டு கூட்டுறவு சங்கம் போனால் தேச விரோதி போல் பார்க்கிறான். அக்கம்பக்கத்தாரிடம், மருந்துக் கடை, உரக்கடையில் விதை, உரம், மருந்து கடன் வாங்கி கரிசல் காட்டுல போட்டாச்சு, கார்த்திகை தேதி எட்டாச்சு மழைக்கான அறிகுறியே தென்படவில்லை.

அடுப்புல விறகு இரைச்சல் சத்தமும் கேட்கல . தட்டானும் பறக்கல, மழை பெய்யுற மாதிரி தெரியல, பயிரு வாடுறதப் பார்த்தா தொண்டக்குழியில சோறு இறங்க மாட்டீங்குது.

ராத்திரி துாக்கம் வரல, ஆடு மாடுக மனுஷ மக்களுக்கு குடிக்க எந்த கெடங்குலயும் தண்ணியும் இல்ல.

அரசாங்கம் என்ன செய்ய காத்திருக்கோ தெரியல. இதுக்கு முந்தி ஆண்டவக எல்லாம் தெரிஞ்சும் சம்சாரிகளுக்கு எதுவும் செய்யல, புது ஐயாவுக்கு எதுவும் தெரியல.

எடுத்துச் சொல்லுறதுக்கும் கிட்டத்துல ஆளுக இல்ல, அப்படியே சொன்னாலும் அத கேட்குற பக்குவமும் இல்ல.

அரசியல் வாதிக டெல்டா விவசாயிகளுக்காக குரல் கொடுக்காக 'வானம் பார்த்த கரிசல் விவசாயிகளுக்காக எந்த அரசியல் வாதியும் எதுவும் பேசுறது இல்ல.

இப்படியே போனா சம்சாரிக மட்டுமில்ல எல்லா சனங்களும் மண்ணத் திங்க வேண்டியது தான்.

குருவி சேர்த்த மாதிரி சேர்த்து வச்ச துட்ட கரிசல் காட்டுல போட்டுட்டு மன வேதனையோட இருக்கோம் என விவசாயி லட்சுமணன் கண்ணீருடன் பேசியுள்ளார்.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us