தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/திருவண்ணாமலை மகா தீபக் கொப்பரையின் கதை

திருவண்ணாமலை மகா தீபக் கொப்பரையின் கதை

திருவண்ணாமலை மகா தீபக் கொப்பரையின் கதை


PUBLISHED ON : நவ 23, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 23, 2026 04:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாளை திருவண்ணாமலையில் தீபத்திருவிழா

அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலையில் ஏற்றப்படவிருக்கும் மகா தீபத்தை பற்றிய தொகுப்புதான் இந்தக் கட்டுரை.

அடிமுடி காணா அனாதியான சிவபெருமான்,பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே பேரொளிப் பிழம்பாய் அவதரித்த திருத்தலம் — திருவண்ணாமலை. அந்தப் பரம்பொருளின் ஜோதி வடிவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவன்று 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது உலகப்புகழ்பெற்ற ஆன்மீக நிகழ்வாகும்.Image 1649395மலை உச்சிக்குச் செல்லும் அந்த பிரம்மாண்ட தீபக் கொப்பரை சாதாரணமானதல்ல; ஆன்மீகமும் ஆகம விதிகளும் இணைந்த அற்புதப் படைப்பு: அதிக வெப்பத்தைத் தாங்கும் தூய செப்புத் தகடுகளால் உருவாக்கப்படும் இந்தக் கொப்பரை, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் விதமாக 3 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5 முதல் 6 அடி உயரமும், மேல் பாகம் 4 அடி அகலமும் கொண்ட இந்தக் கொப்பரையின் மொத்த எடை 250 முதல் 300 கிலோ வரை இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் விழாவுக்கு முன், ஆயிரம் கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு இறுதி கட்டச் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. கோயில் சன்னதியில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பின்னரே இது மலைக்கு அனுப்பப்படும்.

மகா தீபத்திற்கு முதல் நாள், ஆயிரக்கணக்கான அடி உயரமுள்ள கரடுமுரடான பாறைப் பாதையில், சவுக்குக் கழிகளால் கட்டப்பட்ட இந்த 300 கிலோ கொப்பரையை கோயில் பணியாளர்களும் பக்தர்களும் தங்கள் தோள்களில் சுமந்து செல்கின்றனர். 'அரோகரா! அண்ணாமலையானுக்கு அரோகரா!' என்ற பக்தி முழக்கத்துடன் சுமார் 7 கிலோமீட்டர் மலைப்பாதையைக் கடந்து உச்சிக்குக் கொண்டு சென்று தயார் நிலையில் வைக்கின்றனர்.Image 1649396மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் சுடர்விட்டு எரியத் தேவையான ஏற்பாடுகள் பிரமிக்க வைப்பவை.3,500 முதல் 4,500 கிலோ வரை தூய பசு நெய் பயன்பாட்டிற்கு உச்சிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.சுமார் 1,000 முதல் 1,500 மீட்டர் நீளமுள்ள காடா துணி திரியாகச் சுற்றப்பட்டு, 10 கிலோ கற்பூரத்தைக் கொண்டு தீபம் பற்றவைக்கப்படுகிறது. கோயிலில் அதிகாலை ஏற்றப்படும் பரணி தீபத்தின் சுடரைக் கொண்டு, மாலை 6 மணிக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்தத் தீபத்தை ஏற்றும் உரிமையை 'சிவபாதவர்' எனப்படும் பர்வத ராஜகுல வம்சாவளியினர் தொன்றுதொட்டுச் செய்து வருகின்றனர்.

மலை உச்சியில் கார்த்திகை தீப நாளில் ஏற்றப்படும் இந்த மகா தீபம், தொடர்ந்து 11 நாட்களுக்கு அணையாமல் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.இந்த ஜோதிப் பிழம்பை திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள சுமார் 30 முதல் 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களிலிருந்தும் தரிசித்து பக்தர்கள் பேறு பெறலாம்.11 நாட்கள் நிறைவடைந்ததும் கொப்பரை கீழே கொண்டு வரப்படும். அதில் எஞ்சிப் படிந்திருக்கும் கரியானது சேகரிக்கப்பட்டு, 'அண்ணாமலையார் மை' என்னும் புனிதப் பிரசாதமாக ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்குச் சாத்தப்பட்டுப் பக்தர்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.

சிவனின் சோதி வடிவத்தைக் கண்டு பிறவிப் பிணி அறுப்போம்; அண்ணாமலையான் அருளைப் பெறுவோம்!

-எல்.முருகராஜ்

படங்கள்:அருண்,திருவண்ணாமலை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us