தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடும் ராமு தாத்தா

பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடும் ராமு தாத்தா

பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடும் ராமு தாத்தா


PUBLISHED ON : ஜூலை 06, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 06, 2018 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோலி சோடா சினிமா குழுவினர் தங்கள் சினிமா விளம்பரத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து எவ்வித எதிர்பார்ப்பும் இ்ல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்பர்வகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசும் பணஉதவியும் வழங்கி கவுரவித்தனர்.

அவர்களி்ல் ஒருவர்தான் மதுரை ராமு தாத்தா



எண்பத்தைந்து வயதாகும் இவர் கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளியவர்களுக்காக பத்து ரூபாய்க்கு சாப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார்.



விருதுநகர் அருகே உள்ள வில்லுாரைச் சேர்ந்தவர், தனது 13 வயதில் ஒட்டலில் சர்வராக உழைக்க ஆரம்பித்தார் பல ஊர்களில் பல ஒட்டலில் வேலை பார்த்து இருக்கிறார்.



அப்படி ஒரு சமயம் வடலுார் போயிருந்த போது பசிப்பிணியகற்றும் வள்ளலார் ஆசிரமத்திற்கு சென்றிருக்கிறார், அங்குள்ளவர்கள் வயிறார சாப்பிட்டு மனமார வாழ்த்துவதைப் பார்த்தார்,அப்போது முதல் தானும் இது போல முடிந்தவரை எளியவர்களின் பசி அகற்றும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தார்.



மதுரை குருவிக்காரன் சாலையில் தெரு ஒரத்தில் ரோட்டுக்கடை போட்டு ஒரு இட்லி பத்து பைசாவிற்கு விற்று தனது தொழிலை ஆரம்பித்தார் அப்போது முதல் இப்போது பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடுவது வரை காசு இல்லாதவர்கள் இவரது கடையில் இலவசமாக சாப்பிட்டுவிட்டு போகலாம், மேலும் தினமும் பத்து இருபது சாப்பாட்டை பார்சாலாக கட்டி நடக்கமுடியாதர்களுக்கு கொண்டு போய் கொடுத்துவிட்டு வருவார் இப்போது வயதாகிவிட்டதால் கொடுத்தனுப்பிவிடுகிறார்.



குருவிக்காரன் சாலையில் இருந்தவர் படிப்படியாக வளர்ந்து இப்போது இருக்கும் மதுரை அண்ணா நிலையம் பகுதிக்கு வந்தார், இவரது மனைவி பூரணத்தம்மாள் இவருக்கு துணையாக இருந்தது மட்டுமின்றி இவரது தொழிலுக்கு, தொண்டுக்கு துாணாகவும் இருந்தார்.



மூன்று வருடங்களுக்கு முன்புதான் ராமுவின் மனைவி பூரணத்தம்மாள் இறந்துபோனார் இறக்கும் தருவாயிலும் கணவரை அழைத்து எந்த சூழ்நிலையிலும் குறைந்த விலையில் ஏழைகளுக்கு சாப்பாடு போடுவதை மட்டும் நிறுத்திவிடாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.



''அந்த மகராசி இல்லாம நான் மனதால் கஷ்டப்படுறேன், ஆனா கடைக்கு நம்பி வரக்கூடிய தொழிலாளர்கள் ஏழைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இந்த வயதிலும் இஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டு இருக்கிறேன்'' என்று நெகிழ்கிறார் ராமு தாத்தா.இவரின் குடும்பத்தினரும் இவருக்கு நிறையவே உதவுகின்றனர்.



அந்தந்த மாதம் உணவு பொருள் வாங்குவதற்கும், வேலையாட்களுக்கு சம்பளம் போடுவதற்கும் எவ்வளவு செலவாகுமோ? அதை வைத்துதான் சாப்பாட்டின் விலையை நிர்ணயம் செய்கிறேன், எனது செலவிற்கு கட்டுப்படியானால் போதும் ஒரு பைசா லாபம் வேண்டாம்.

மதிய சாப்பாடு பத்து ரூபாய்க்கு தருவது போல இப்போது காலையில் இட்லி தோசையும் குறைந்த விலைக்கு தருகிறேன்.



யார்ட்டேயும் எந்தவித உதவியும் எதிர்பார்ப்பது இல்லை இருந்தாலும் சில புண்ணியவான்கள் தேடிவந்து உதவும் போது மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன், அப்படித்தான் கோலி சோடா குழுவினர் வழங்கிய பரிசினையும் பாராட்டையும் ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லும் ராமு தாத்தா தொல்லையாக நினைத்து மொபைல் போனிற்கு விடை கொடுத்துவிட்டார்.



எல்.முருகராஜ்









தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us