தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/வெங்கடபூபதியின் வித்தியாசமான குருவந்தனம்...

வெங்கடபூபதியின் வித்தியாசமான குருவந்தனம்...

வெங்கடபூபதியின் வித்தியாசமான குருவந்தனம்...


PUBLISHED ON : அக் 14, 2014 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2014 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் முதுகெலும்பு ஒடிந்தாலும் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் அதே நேரத்தில் என்னைப்போன்ற உடல் ஊனமுற்றவர்களுக்கு உறுதுணையாகவும் இருக்கிறேன் என்று சொல்லும் வெங்கடபூபதியின் கதையை கொஞ்சம் பார்ப்போமா.தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடபூபதி.விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.வீட்டின் மீதான பற்றைவிட நாட்டின் மீதான பற்று காரணமாக படிப்பு முடித்த கையோடு ராணுவத்திற்கு சென்று சிறிது காலம் பணியாற்றினார்.பின்னர் சொந்த ஊர் திரும்பியவருக்கு இயற்கை விவசாயத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது.இதற்காகவே உழவர் மன்றம் துவங்கி இயற்கை விவசாயம் தொடர்பான வேலைகளை மும்முரமாக செய்துவந்தார்.ஒத்தகருத்து கொண்ட விவசாயிகளை ஒருங்கிணைத்தார்.இப்படி சுறுசுறுப்பாக இயங்கிவந்த வெங்கடபூபதி விவசாயத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் போதுதான் எதிர்பாரதவிதமாக அந்த விபத்து நடந்தது.இரு சக்கரவாகனத்தில் சென்ற இவர் மீது பின்னால் வந்த பஸ் மோதியதில் இடுப்பு எலும்பு முறிந்தது.மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவோமோ இல்லையா என்பதை தெரிந்து கொள்ளவோ இவர் மருத்துவமனைக்கு பதினைந்து லட்ச ரூபாய் வரை இழக்கவேண்டி வந்தது.நீங்கள் ஒரு முதுகு தண்டு வடம் பாதித்த நோயாளி இனி இடுப்புக்கு கீழ் உள்ள உங்கள் அவயங்கள் செயல்படாது என்று மருத்துவமனையில் சொல்லிவிட்டனர்.இந்த வார்த்தையை ஜீரணிக்கமுடியவில்லையே இனிவரும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என நொந்து போன வெங்கடபூபதி தற்கொலை முயற்சியை மேற்கொண்டார்.ஆஸ்பத்திரியில் இருந்ததால் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.மனபலம் பெறுவதற்கும் சக்கர நாற்காலியில் இருந்தபடி வாழப்பழகுவதற்கும் தென்காசியில் உள்ள அமர்சேவா சங்கத்திற்கு அனுப்பிவைத்தனர்.அங்கே வாசலில் இருந்த ஒரு பெரியவர் வாங்க வெங்கடபூபதி நான்தான் ராமகிருஷ்ணன் என்று சொல்லி வரவேற்றார்.வணக்கம் போட்டுவிட்டு உள்ளே போய் யார் இவர் என விசாரித்த போதுதான் இந்த அமர்சேவா சங்கத்தை தோற்றுவித்தவரே இவர்தான் என்று தெரிவித்தனர்.நமக்காவது இரண்டு கைகள் இருக்கிறது ஆனால் இவருக்கு கால்கள் மட்டுமின்றி கைகளும் அல்லவா செயல்படவில்லை.இருந்தும் இவ்வளவு பேரை வாழவைக்கிறாரே என்று எண்ணியதும் திரும்ப வெளியே வந்து அவரை என் இருகைகூப்பி வணங்கினேன்.என் வாழ்க்கையில் நம்பிக்கை வரும்படியாக நிறைய பேசியவர் உங்களால் இந்த சமூகத்திற்கு ஆகவேண்டியது நிறைய இருக்கிறது என்று சொல்லி ஆறு மாதகாலம் பயிற்சி கொடுத்தார்.அது ஒரு குருகுலவாசமாகவும் அவரையே என் குருவாகவும் ஏற்றுக்கொண்டேன்.குருவின் வழியில் நின்று நாமும் நாலு பேருக்கு நல்லது செய்யவேண்டும் என்று உறுதி பூண்டேன்.தேனி வடபுதுப்பட்டிக்கு நம்பிக்கையுடன் திரும்பினேன்.சக்கர நாற்காலியும் என் தாய் சுப்புலட்சுமியும் துணை நிற்க குருநாதர் பெயரில் ராம்ஜி பொதுநல அறக்கட்டளையை துவங்கினேன்.யாரிடமாவது நன்கொடை வாங்கினாலோ எதிர்பார்த்தாலோ இருக்கும் அன்பும் நட்பும் கெட்டுவிடும் என்பதால் யாரிடமும் பணம் எதிர்பார்ப்பது இல்லை என்பதை கொள்கையாக கொண்டேன்.என் வீட்டையே பயிற்சி கூடமாக்கினேன் தையல் மெஷின்கள் மற்றும் கம்ப்யூட்டர் மெஷின்கள் வாங்கிப்போட்டு உடல் ஊனமுற்றவர்களுக்கும் மற்றம் ஏழை எளிய பெண்களுக்கும் பயிற்சி கொடுத்தேன்.என் முதுகெலும்பு உடைந்தாலும் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை விட்டுவிடாமல் ஆள்வைத்து செய்துவருவததால் எனது அறக்கட்டளைக்கான செலவுகளை விவசாய வருமானம் ஈடுகட்டி வருகிறது.விவசாயத்தை இன்னும் விரிவாக செய்யவேண்டும் இதன் மூலம் வரக்கூடிய வருமானத்தை கொண்டு அறக்கட்டளையை விரிவுபடுத்த வேண்டும்.இதுவரை அறக்கட்டளையில் வழங்கப்பட்ட தையல் மற்றும் கணணி பயிற்சி பெற்ற இருநூறு பேர் வெளியேறி சுயமாக சம்பாதித்து கவுரமாக வாழ்ந்துவருகின்றனர்.

இப்போது இருநூறு பேர் பயிற்சி பெறுகின்றனர்.இந்த இருநூறு பேர் இரண்டாயிரம் பேராக மாறவேண்டும்,நடமாட முடியாதவர்கள் அறக்கட்டளை வளாக கட்டிடத்திலேயே தங்கி பயிற்சி பெறவேண்டும் இதுதான் என் கனவு என் குருவிற்கு செலுத்தும் காணிக்கை என்று சொல்லும் வெங்கடபூபதியிடம் பேசுவதற்கான எண்:7871367699.- எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us