தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/கதர் டாக்டர்...

கதர் டாக்டர்...

கதர் டாக்டர்...


PUBLISHED ON : டிச 12, 2014 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2014 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் போகும் வழியில் உள்ளது டி.கல்லுப்பட்டி.பேரூராட்சி அந்தஸ்தில் இயங்கும் இங்குதான் காந்திநிகேதன் ஆஸ்ரமம் உள்ளது. இந்த கல்லுப்பட்டியில் செயல்பட்டுவரும் டாக்டர் முத்துகிருஷ்ணன்தான் இந்த வார நிஜக்கதையின் நாயகன். 71 வயதை தொட்டுவிட்ட இந்த டாக்டர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கதர் வேட்டி சட்டையை மட்டுமே விரும்பி அணிந்து வருகிறார்.இந்த கதர்வேட்டி சட்டையுடன்தான் அமெரிக்கா உள்ளீட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார் ,பல்வேறு சர்வதேச மருத்தவ கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு பேசிவருகிறார். இதற்கு எல்லாம் காரணம் இவரது தந்தை முத்துகிருஷ்ணன்.கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்தவர், நாட்டின் மீது பற்றையும் பக்தியையும் எப்போதும் வைக்கவேண்டும் என்பதை ஒவ்வொரு கவள உணவிலும் மகனுக்கு ஊட்டி வளர்த்தவர்.

மதுரையில் எம்பிபிஎஸ் மருத்துவபடிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா போவதற்கான ஏற்பாடுகளில் இறங்கிய போது ஏம்ப்பா நம்மூரில் நோயாளிகளே இல்லையா? முதல்ல நம்ம நாட்டை கவனியுங்கப்பா என்று சொன்ன வார்த்தைக்காக கல்லுப்பட்டியில் மருத்துவமனையை கட்டி தனது சேவையை துவங்கினார்.அப்போது ஊரின் மக்கள் தொகை ஆயிரத்திற்கு குறைவே. சில வருடங்கள் போன பிறகு எம்எஸ் மேற்படிப்பு படித்து முடித்தார்.இந்த படிப்பை முடித்த போது உடன் படித்த நண்பர்கள் இனியாவது நகரத்து பக்கம் வரும் எண்ணம் உண்டா என்று கேட்டனர்.இந்த முறை டாக்டர் முத்துகிருஷ்ணனே கிராமத்தில்தான் இனி என் சேவை வாழ்க்கை எல்லாம் என்ற உறுதியான பதிலை தந்துவிட்டார். கல்லுப்பட்டியில் அந்த கால கட்டத்தில் நிறையவே கதர் நுால் நுாற்பு நடைபெற்றது. பெரும்பாலான மக்கள் வீட்டில் உள்ள ராட்டையில் நுால் நுாற்று வந்தனர்.கதர் என்பது நமது நாட்டின் பொக்கிஷம்.கதரை ஆதரிப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை ஆதரிக்கலாம் என்பதை உணர்ந்ததும் முதலில் கதர் சட்டை அணிய ஆரம்பித்தார் நாளடைவில் கதர் வேட்டியும் அணிய ஆரம்பித்தார். இவர் இப்படி கதர் வேட்டி சட்டை அணிய ஆரம்பித்து இருபத்தைந்து ஆண்டுகளாகப் போகிறது.கதர் வேட்டி சட்டைதான் எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது,கம்பீரமும் தருகிறது.நான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும் கூட அறுவை சிகிச்சை கூடத்திலும் நான் கதர் வேட்டி சட்டைதான் அணிந்திருப்பேன் அங்கு உபயோகப்படுத்தும் துணிகளும் கதர் ரக துணிகள்தான். நான் மேற்படிப்பு படிக்கும் போது எடுத்துக்கொண்ட தலைப்பு அறுவை சிகிச்சையின் போது உடுத்திக்கொள்ளும் ஆடை பற்றியது.இதற்கான ஆராய்ச்சியில் இறங்கிய போது பாதுகாத்து வைத்து பயன்படுத்தப்படும் ஆடைகளைவிட காற்று மற்றம் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் ஆடைகளில் தொற்று குறைவு என்பதை உணர்ந்தேன். இதன் காரணமாக நான் எனது அறுவை கூடத்தை நல்ல காற்றோட்டம் உள்ள இடமாகவும் சூரிய வெளிச்சம் மிகுந்த இடமாகவும் வைத்துள்ளேன் மேலும் அறுவை சிகிச்சையின் போது கதர் போன்ற உடைகளையே பயன்படுத்துகிறேன். எனது கல்லுப்பட்டி மக்களுக்கு தரமான மருத்துவம் மட்டுமல்ல தரமான கல்வியும் கிடைக்கவேண்டும் என்பதற்காக மெட்ரிகுலேசன் பள்ளியும் நடத்திவருகிறேன்.இன்றைக்கும் பூப்பந்து விளையாடுபவன். அகில இந்திய அளவிலான பூப்பந்து போட்டிகளை கல்லுப்பட்டியில் நடத்தியிருக்கிறேன்.நகர்நல கமிட்டி, வர்த்தகசங்கம் போன்ற அமைப்புகளின் தலைவராகவும் நீண்ட காலம் இருந்து வருகிறேன். ஒரு விஷயத்தில் உண்மைத்தன்மை இருந்தால் அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க இவர் தயங்கமாட்டார், அந்த வகையில் இவர் அல்லோபதி மருத்துவர் என்றாலும் சில நோய்களுக்கு அல்லோபதியைவிட சித்தா ஆயுர்வேதம் யூனானி போன்ற மாற்று மருந்துகளே மேலானாது என்று சொல்லி தன்னிடம் வரும் நோயாளிகளின் நோய் தன்மைக்கு ஏற்ப மாற்று மருந்துகளையும் வழங்கிவருகிறார். ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பை மருத்துவ அறிவை கொஞ்ச காலமாவது கிராமத்து மக்களிடம் செலவிடுங்களேன் என்று அரசாங்கம் கெஞ்சிப்பார்தாலும் கேட்கக்கூடிய மருத்துவ மாணவர்கள் இல்லை. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் பிறந்து வளர்ந்த கிராமத்து மக்களுக்காகவே ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்துவரும் டாக்டர் முத்துகிருஷ்ணனிடம் பேசுவதற்கான எண்:9442032365.(டாக்டர் அறுசை சிகிச்சை கூடத்தில் இருக்கும் போதோ அல்லது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருக்கும் போதே போனை எடுக்கமாட்டார் என்பதை தயவுகூர்ந்து கவனத்தில் வைத்துக்கொள்ளவும்). -எல்.முருகராஜ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us