தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/வித்யாவின் கனவு நனவாகிறது.

வித்யாவின் கனவு நனவாகிறது.

வித்யாவின் கனவு நனவாகிறது.


PUBLISHED ON : ஆக 28, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2016 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வித்யாவின் கனவு நனவாகிறது.



ஓரு கனவு கண்டால்

அதை தினம் முயன்றால்

ஓரு நாளில் நிஜமாகும்



ஆட்டோகிராப் படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலின் நடுவில் வரும் இந்த வரிகள் கவிஞர் பா.விஜய்க்கு சொந்தமானது மட்டுமல்ல, கேட்டுக்கேட்டு மனதில் வாங்கி இன்று துணை கலெக்டராகியிருக்கும் வித்யாவின் வாழ்க்கையை மாற்றிப்போட்ட வரிகளுமாகும்.



தமிழக அரசின் சார்பில் நடத்தி முடிக்கப்பட்ட குரூப்-1 தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடத்தை பெற்று துணை கலெக்டராகி இருப்பவர்தான் சி.வித்யா.

2லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்ததில் முதல் கட்ட தேர்வில் 4ஆயிரத்து282 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களுக்கு பல்வேறு கட்ட தேர்வு நடத்தப்பட்டு 79 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.இந்த 79 பேரில் முதல் இடத்தை பெற்றவர்தான் வித்யா.



விருதுநகரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தரான வித்யாவிற்கு சிறு வயது முதலே கலெக்டராகும் கனவு உண்டு அதற்கு கல்வி மட்டுமே வழி என்பதால் நன்றாக படித்தார்.பள்ளி வாழ்க்கையை நல்ல மதிப்பெண்களோடு முடித்தவர் பிறகு பி.டெக்,எம்.டெக் முடித்த வெளிமாநில வேலைக்கு சென்றார்.

பிறகு சென்னை திரும்பினார், குரூப் 2 தேர்வு,சென்னை தலைமைச் செயலக வேலை, திருமணம், குழந்தை என்று வாழ்க்கை ஒடிக்கொண்டே இருந்தது.அதே நேரத்தில் அவரது கலெக்டர் கனவும் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது.



நேரடி கலெக்டர் தேர்வு எழுத முடியாத நிலையில் குரூப் 1 தேர்வு எழுதி துணை கலெக்டராகிவிட்டால் பிறகு சில வருடங்களில் கலெக்டராகும் முடியும் என்பதால் குரூப் 1 தேர்வு எழுதுவதில் உறுதியாகும் முனைப்போடும் இறங்கினார் சதா அதே சிந்தனையோடு இயங்கினார். இப்போது துணை கலெக்டராகிவிட்டார்.

எத்தனையோ லட்சம் பேர் முயற்சிக்கிறார்கள் அதில் நாம் எங்கே என்று நினைக்காமல் நமது லட்சியம் என்னவோ அதை நினைத்து படிக்கவேண்டும், எனக்கு என் கணவர் மற்றும் தாயார் உதவியாக இருந்தார்கள்.



வேலைக்கு போய்க்கொண்டும், கணவர் குழந்தை குடும்பத்தை பார்த்துக்கொண்டும் கூட என்னால் முதல் இடத்திற்கு வருமளவு படிக்க முடிந்தது என்றால் மற்றவர்களால் ஏன் முடியாது? தேவை எல்லாம் முயற்சி மட்டுமே.

படிப்போடு நிறைய பொது அறிவையும் சுற்றுச்சுழல் சம்பந்தமான விவரங்களையும் அதில் உங்கள் ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள், இது போன்ற அரசுத்தேர்வு எழுதுபவர்களுக்கு அது போன்ற விஷயங்கள் பெரிதும் பயன்படும்.



இயற்கையை பேணுவதிலும் எளிய மக்களை முன்னேற்றுவதிலும் எப்போதும் அக்கறை கொண்ட வித்யாவிற்கு கிடைத்துள்ள பதவி அவரது எண்ணத்திற்கு துணை நிற்க வாழ்த்துவோம்.

அவரது மெயில் முகவரி:chandranvid@gmail.com



--எல்.முருகராஜ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us