PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM


தங்களது பல்வேறு சாகசங்கள் மூலம் திட்டம் சிறப்பானதுதான் என்பதை சென்னையில் பயிற்சி பெற்ற வீராங்கனைகள் நிரூபித்தனர்.
பிளஸ் டூ முடித்து,ஆர்வமும் தகுதியும் திறமையும் இருந்தால் போதும் ராணுவத்தில் சேரலாம் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து தரைப்படை,விமானப்படை,கப்பல்படையில் 'அக்னி வீரர்கள்' சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
நான்கு வருடங்களுக்கு பிறகு இவர்களில் 25 சதவீதம் பேர் ராணுவ வீரர் வீராங்கனையான தொடர்வார்கள் மீதம் உள்ளவர்கள் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு சிபாரிசு செய்து அனுப்பப்படுவர்.,க்ஷ
சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படையில் 1983 அக்னிவீரர்கள் தங்களது பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர், இவர்களில் 234 பேர் பெண்கள்.மிக இளவயது என்பதால் களைத்துப் போகாமல் வேகமாகவும், விவேகமாகவும், துல்லிதமாகவும் பயிற்சியை நிகழ்த்தினர்.
தலைமுடியை ராணுவ வீரர்களுக்கான முறையில் ஒட்டவெட்டியிருந்ததால் யார் வீரர்கள்? யார் வீராங்கனைகள்? என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சாகசங்கள் சரிசமமாக இருந்தனஎரியும் ஓடுகளை கையால்,தலையால் உடைத்தும்,,துப்பாக்கியை பம்பரம் போல சுழட்டியும்,சிலம்பம் வீசியும்,யோகா செய்தும் வீராங்கனைகள் அசத்தினர்.
பிகார்,உ.பி.,ம.பி.,போன்ற பின் தங்கிய,மற்றும் மலை வாழ் கிராம மக்கள் நிகழ்ச்சியைக் காண நிறைய பேர் வந்திருந்தனர், அவர்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் காரணம் மைதானத்தின் மையத்தில் இருந்த பெரும்பாலன வீராங்கனைகள் அவர்களின் பிள்ளைகளாவர்.
.இவர்களுக்கு எல்லாம் கனவாக இருந்த ராணுவப்பணியை நனவாக்கியிருக்கும் அரசுக்கு நாங்களும் பிள்ளகைளும் செலுத்தும் நன்றி என்பது எந்த நிலையிலும் தாயகம் காப்பாதாகவே இருக்கும் என்றனர்,சிலிர்ப்பாக இருந்தது.
-எல்.முருகராஜ்.

