sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

அள்ளித்தந்த வள்ளல் கிருஷ்ணா சிவுகுலா

/

அள்ளித்தந்த வள்ளல் கிருஷ்ணா சிவுகுலா

அள்ளித்தந்த வள்ளல் கிருஷ்ணா சிவுகுலா

அள்ளித்தந்த வள்ளல் கிருஷ்ணா சிவுகுலா

1


PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1304443தான் படித்த கல்வி நிறுவனத்திற்கு ஒருவர் 228 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார் என்ற செய்திதான் இன்றைக்கு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர்தான் தொழில் அதிபராக உள்ள முனைவர் கிருஷ்ணா சிவுகுலா,

8ஆம் வகுப்பு வரை தெலுங்கு மீடியம் பள்ளியில் படித்தார். 53 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1970களில் ஐஐடி சென்னையில் படித்தவர். அப்போது எம்.டெக் ஏரோஸ்பேஸ் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் உள்ள ஹோஃப்மேன் நிறுவனத்தில் சேர்ந்த தலைமை பொறியாளர் அந்தஸ்திற்கு முன்னேறினார். 1984ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தார்

பின்னர் ஹோஃப்மேன் நிறுவனத்திற்கு சி.இ.ஓவாக பதவி வகித்தார். 1990ஆம் ஆண்டு தனது முதல் நிறுவனமான சிவா டெக்னாலஜிஸை நியூயார்க்கில் தொடங்கினார்,சிவா டெக்னாலஜிஸ் நம்பர் ஒன் நிறுவனமாக வளர்ந்தது. 1997ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் கிளை பெங்களூருவில் தொடங்கப்பட்டது.

மேலும் அட்வான்ஸ்டு மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி துறையில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.

பின்னர் ஹோஃப்மேன் நிறுவனத்திற்கு சி.இ.ஓவாக பதவி வகித்தார். 1990ஆம் ஆண்டு தனது முதல் நிறுவனமான சிவா டெக்னாலஜிஸை நியூயார்க்கில் தொடங்கி நடத்தினார். கீழ் சிவா டெக்னாலஜிஸ் நம்பர் ஒன் நிறுவனமாக வளர்ந்தது. 1997ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் கிளை பெங்களூருவில் தொடங்கப்பட்டது. Indo-US MIM எனப்படும் நிறுவனத்தை அமெரிக்காவில் தொடங்கினார்.

மேலும் அட்வான்சுடு மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி துறையில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனத்தையும் ஆரம்பித்தார். அப்படியே அமெரிக்காவில் தனது வாழ்க்கையை தொடர்ந்துள்ளார்.Image 1304445இந்திய அளவில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய நன்கொடை இதுவே.இதன் மூலம் சென்னை ஐஐடி பணிகளை மேலும் மேம்படுத்தும்.கிருஷ்ணா சிவுகுலாவை கவுரவிக்கும் விதமாக கல்வி நிறுவன கட்டிடம் ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் முனைவர் கிருஷ்ணா சிவுகுலா, அவரது மனைவி ஜெகதாம்பாள், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி என பலர் பங்கேற்றனர்.

கிருஷ்ணா சிவுகுலா பேசுகையில்,55 ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தேன். அங்கு பணக்காரர்களாக இருப்பவர்கள், தாங்கள் படித்த பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு கோடிக்கணக்கில் நன்கொடை தருகின்றனர். மாணவர்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இந்த நிதி பயன்படும்,இதைப் பார்த்து பார்த்து வளர்ந்த நான் நாமும் நாம் படித்த நிறுவனத்திற்கு நிதி வழங்கவேண்டும் என்று முடிவுசெய்தேன்.

ஏழை குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு, தலைசிறந்த படிப்பை ஐ.ஐ.டி வழங்கியது. சென்னை ஐ.ஐ.டியில் எம்.டெக் 12.50 ரூபாயில் படித்தேன். இதற்கு முன்பும் 5 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளேன். ஒரு நாள் காலை திடீரென யோசித்தேன். என் நிறுவனத்தில் எனது ஷேர், அதன் மதிப்பு ஆகியவற்றை வைத்து, இன்னும் கூடுதலாக நிதி கொடுக்க நினைத்தேன்.அதை இப்போது கொடுத்துள்ளேன் எனக் கூறினார்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால். அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு, இந்தியா ஜனநாயகத்துவ நாடாக உள்ளது. இந்தியா முதலாளித்துவ நாடாக மாறும்போது மேலும் வளர்ச்சி பெருகும்,தொழில் அதிபர்கள் பெருக இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு உள்ள விதிமுறைகள் மாற்றப்படவேண்டும்.

இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள் முறையாக வருமானம் வரி செலுத்த வேண்டும். கருப்பு பணம் ஒழிந்தால் மட்டுமே இந்தியா தொழில் வளர்ச்சியை பெருக்க முடியும். பெங்களூருவில் 2 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுக்கிறோம். உணவு மட்டுமின்றி சிறப்பாக பணியாற்றும் மருத்துவமனைகளுக்கு நன்கொடை வழங்குகிறேன்.நிறைய சம்பாதிப்பது பெரிதல்ல அதில் பெரும்பகுதியை மனநிறைவோடு கொடுப்பதுதான் பெரிய விஷயம் அந்த விஷயத்தில் கிருஷ்ணா சிவுகுலா உயர்ந்துநிற்கிறார்.

-எல்.முருகராஜ்.






      Dinamalar
      Follow us