sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/1742 தாவரங்களில் இருந்து மருந்து!

1742 தாவரங்களில் இருந்து மருந்து!

1742 தாவரங்களில் இருந்து மருந்து!


PUBLISHED ON : மார் 26, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துளசியைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு ஏராளமான மருத்துவப் பயன்கள் உண்டு என்று தெரியும். அப்படியானால், அதில் பல வேதிப் பொருட்கள் இருக்கவேண்டும். அவை என்ன தெரியுமா? பேராசிரியர் அரிஜித் சமல்லின் குழுவைக் கேளுங்கள். துளசி மட்டுமல்ல; அது மாதிரி 1,742 மருத்துவத் தாவரங்களின் விவரங்களை அள்ளி வீசுவார்கள். அரிஜித் சமல் பேசத் தொடங்கினார்:

“இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளன. இவை உலக அளவில் முக்கியத்துவம் பெற்றவை. மருத்துவப் பண்புகள் கொண்ட தாவரங்கள்தான், இந்திய மருத்துவ முறைகளுக்கு அடிப்படை. தாவரங்களில் குறிப்பிட்ட சில வேதி மூலக்கூறுகள், மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளன.

வேதி மூலக்கூறுகளுக்கு ஆங்கிலத்தில், 'ஃபைட்டோ கெமிக்கல்ஸ்' (Phytochemicals) என்று பெயர். இவை நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு போல, தாவரங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் கிடையாது. ஆனால், ஓரிடத்தில் நிலையாக இருக்கும் தாவரங்கள், நோய்க் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பிழைத்திருக்க, இது உதவும்.

எந்தெந்தத் தாவரத்தில் என்னென்ன ஃபைட்டோ கெமிக்கல்கள் உள்ளன? அவற்றின் அளவு என்ன? தன்மைகள் என்ன? மனிதர்களின் புரோட்டீன்களுடன் அவை வினைபுரிய வாய்ப்புள்ளதா? எப்படி வினைபுரியும்?

இவற்றை எல்லாம் ஆராய்ந்து, ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். அந்த விவரங்களை உலக அளவிலான ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் வகையில் வெளியிடுவது முக்கியம். இப்படிச் செய்தால்தான், நோய் தீர்க்கும் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். இத்தகைய மிக முக்கியமான ஒரு பணியைத்தான், நாங்கள் செய்துள்ளோம்.

இந்த வலைதளத்துக்கு இம்பாட் (IMPPAT - Indian Medicinal Plants, Phytochemistry and Therapeutics) என்று பெயர். ஓராண்டு காலமாக 50 இந்திய நூல்கள், 5 தரவுதளங்கள், 7000 ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படைத் தரவுகளை ஆராய்ந்து, இந்த வலைதளத்தை உருவாக்கியுள்ளோம்.”

இதுபோன்ற தரவுகள் ஏற்கெனவே இல்லையா?

“உள்ளன. ஆனால், அவை பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம்பாட் தளத்தில் அத்தனை தரவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டுள்ன.”

இம்பாட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

“இதில், 1,742 இந்திய மருத்துவத் தாவரங்களில் உள்ள 9,596 ஃபைட்டோ கெமிக்கல்களைப் பற்றிய விவரங்கள் உள்ளன. இந்தத் தளத்தில் 'Tulsi' என பதிவிட்டால், துளசிச் செடியில் எத்தனை வகைகள் உள்ளன? அவற்றில் எத்தனை வகையான ஃபைட்டோ கெமிக்கல்கள் இருக்கின்றன? குறிப்பிட்ட ஃபைட்டோ கெமிக்கல் மருந்தாக மாறும் தன்மையை அதிகம் பெற்றிருக்கிறதா? பிற நாடுகளின் மருத்துவத் தாவரங்களில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களுடன் அது ஒத்துப்போகிறதா? என அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்து கொள்ளலாம்.

இம்பாட்டில் இடம்பெற்றுள்ள 9,596 ஃபைட்டோ கெமிக்கல்களில், 960 கெமிக்கல்களை, புதிய மருந்துகளாகப் பயன்படுத்த முடியும். 960 மூலக்கூறுகளில் இதுவரை வெறும் 32 மூலக்கூறுகள்தான் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாடு அமைப்பு அங்கீகரித்துள்ள மருந்துகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மீதமுள்ள 96 சதவீத மூலக்கூறுகள் அனைத்தும் புதிய மருந்துகளாகப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளவை. அவற்றில் 14 மூலக்கூறுகள் மருந்தாக செயற்படக்கூடிய தன்மை அதிகம் பெற்றிருக்கின்றன. அவற்றில் ஒன்று, நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான நிலவேம்பு தாவரத்தில் (Andrographis paniculata) உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் ஒன்று! மகிழ்ச்சியான தகவல்.”

சென்னை தரமணியில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தைச் (Institute of Mathematical Sciences - -IMSC) சேர்ந்த குழு, இந்த ஆய்வைச் செய்துள்ளது. முனைவர் அரிஜித் சமல் தலைமையில், எம். கார்த்திகேயன், பி.எஸ். கார்த்திகேயன், R.P. விவேக் ஆனந்த், R.P. பரத் சந்த், S.R. அபர்ணா,

P. மங்கலபாண்டி ஆகிய 6 பேர் அடங்கிய குழு, இப்பணியைச் செய்துள்ளது

சுட்டி : http://cb.imsc.res.in/imppat/statistics

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us