உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 25, 2016

அ நிறம் | அளவு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ரோஜர் பெடரர் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை 6-4, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றி மூலம் கிராண்ட் ஸ்லாம் (Grandslam) போட்டிகளில் முன்னூறு வெற்றிகள் பெற்ற முதலாவது ஆண் வீரர் என்னும் பெருமையை ரோஜர் பெடரர் பெறுகிறார். இவருக்கு முன்பாக முன்னூறு வெற்றிகளைப் பெற்றவர் (மொத்தம் 306) என்ற பெருமை அமெரிக்க முன்னாள் வீராங்கனை மார்ட்டினா நவரதிலோவாவுக்கு உண்டு.
