PUBLISHED ON : அக் 19, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனாவில் 'சியாமென்' நகரில், 9வது பிரிக்ஸ் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு, வருடந்தோறும் நடந்து வருகிறது. சுழற்சி முறையில், மாநாடு நடைபெறும் இடம், தேர்வு செய்யப்படுகிறது. இந்த ஆண்டின் பிரிக்ஸ் மாநாட்டை, கோவாவில் வெற்றிகரமாக இந்தியா நடத்தி முடித்துள்ளது.
அடுத்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்த வேண்டிய பொறுப்பில் சீனா உள்ளது. இந்நிலையில் கோவாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரிக்ஸ் அமைப்பின் 9வது உச்சி மாநாடு சீனாவில் உள்ள கடலோர நகரமான சியாமென் நகரில் நடைபெறும். இந்த மாநாடு பிரிக்ஸ் அமைப்புக்கான ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என குறிப்பிட்டார்

