தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சுற்றுச்சூழல் அறிவோம்!

சுற்றுச்சூழல் அறிவோம்!

சுற்றுச்சூழல் அறிவோம்!


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் வாழும் சூழல் நான்கு பிரிவுகளையும், நான்கு அங்கங்களையும், இரண்டு வகைகளையும் உடையது. சுற்றுச்சூழல் சீராக அமைய, இவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

சுற்றுச்சூழலின் நான்கு பிரிவுகள்





வளி மண்டலம்:
புவியின் மேற்பரப்பில் 20,000 கி.மீ. வரை உள்ளது.

நீர் மண்டலம்: கடல் நீர் - 97% பனி ஆறுகள் - 2% நில நீர் / நிலத்தடி நீர் - 1%

நில மண்டலம்: மண், கற்பாறைகள், தனிமங்கள், கரிமங்கள்

உயிரிய மண்டலம்: வளி, நீர், நிலம் ஆகிய மூன்று மண்டலங்களிலும் வாழும் உயிரினங்களின் தொகுப்பு

சுற்றுச்சூழலின் மூன்று அங்கங்கள்





உயிர் அங்கம்:
குறிப்பிட்ட சூழலில் வளரும் திணைத் தாவரங்கள் (Flora - ஃப்ளோரா),

திணை விலங்குகள்: (Fauna - ஃபானா)

உயிரிலி அங்கம்

ஊடகம் (Medium - மீடியம்) - மண், நீர்,

காற்று ஒட்டுண்ணிகள் வாழும் உயிரிகளின் உடல்கள்

தட்பவெப்ப நிலை - பல்லாண்டு கால ஒட்டு மொத்த வானிலை, வாயு மண்டலச் செயல்கள்

ஆற்றல் அங்கம்

சூரிய ஆற்றல்,

புவி வெப்ப ஆற்றல்,

அனல் மின் ஆற்றல்,

புனல் மின் ஆற்றல்,

அணு ஆற்றல்

சுற்றுச்சூழலின் இரண்டு வகைகள்



இயற்கை சுற்றுச்சூழல் Natural Environment நேச்சுரல் என்விரோன்மெண்ட்

இயற்கையின் நிகழ்வுகளில் ஏற்படும் சூழல். தானே சீர்படுத்திக் கொள்ளும் தன்மை உடையது.

செயற்கை சுற்றுச்சூழல் Artificial Environment ஆர்ட்டிஃபிஷியல் என்விரோன்மெண்ட்

மனித முயற்சிகளால் ஏற்படும் சூழல் சீர்குலைவுகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us