தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சுற்றுச்சூழல் நாயகி

சுற்றுச்சூழல் நாயகி

சுற்றுச்சூழல் நாயகி


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louise Carson)

(1907 -1964) அமெரிக்க சூழலியல் அறிஞர்


பூச்சிக்கொல்லி மருந்துகளே சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை, உலகிற்கு முதன்முதலாக தெரிவித்த பெண் சுற்றுச்சூழல் அறிஞர் ரேச்சல் லூயி கார்சன். இயற்கை ஆராய்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ரேச்சல், அறிவியல் இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

இவர் 1951ல் எழுதிய 'நம்மைச் சுற்றியுள்ள கடல்' என்ற புத்தகம் ஆவணப்படமாகத் தயாரிக்கப்பட்டு, ஆஸ்கர் (Oscar) விருது வென்றது. பூச்சிக்கொல்லிகளால் மண், தாவரம், உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப் படுகின்றன என்பது குறித்து ஆராய்ந்து எழுதிய 'மௌன வசந்தம்' (Silent Spring - சைலன்ட் ஸ்பிரிங்) என்ற புத்தகம், மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. உலக சுற்றுச்சூழல் போராட்டத்தின் லட்சியப் புத்தகமாக இது திகழ்கிறது. இதன் விளைவாக, அமெரிக்க அரசு 1974ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை விதித்தது. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால், பறவைகள், மண் புழுக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனத் தனது ஆய்வின் மூலம் ஆதாரங்களுடன் நிரூபித்த ரேச்சல், சுற்றுச்சூழல் நாயகி என புகழப்படுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us