PUBLISHED ON : நவ 14, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப, நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்பணியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்தப் பணி, 2030ம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என, கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் வீரர்களை தேர்வு செய்யும் பணியை, நாசா செய்து வருகிறது. அமெரிக்கா, லூசியானா மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி, அலிசா கார்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இளம்வயதிலேயே, 'அட்வான்ஸ்டு ஸ்பேஸ் அகாடமி' (Advance Space Academy) என்ற விண்வெளி பயிற்சியை முடித்து சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, செவ்வாய் கிரகத்துக்கு செல்வதற்காக, இவரை நாசா தேர்வு செய்தது. அவருக்கு பல்வேறு விண்வெளி பயிற்சிகளை, நாசா தொடங்கியுள்ளது. இந்த பயிற்சிகளை முடித்து, 2030ம் ஆண்டு, அவர் செவ்வாய் கிரகத்துக்கு செல்வார் என, நாசா தெரிவித்து உள்ளது.

