தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/கிண்ண வடிவத்தில் கூடு கட்டும் பறவை

கிண்ண வடிவத்தில் கூடு கட்டும் பறவை

கிண்ண வடிவத்தில் கூடு கட்டும் பறவை


PUBLISHED ON : டிச 11, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செம்பருந்து

ஆங்கிலப் பெயர்கள்: 'ரெட் கைட்' (Red Kite), 'பிராமினி கைட்' (Brahminy Kite)

உயிரியல் பெயர்: 'ஹாலியஸ்டஸ் இன்டஸ்' (Haliastus Indus)

வேறு பெயர்கள்: கருடன், கிருஷ்ணப் பருந்து


சங்க இலக்கியங்கள், புராணங்களில் அதிகம் இடம்பெற்றிருக்கும் பறவை செம்பருந்து. 'அக்சிபிட்ரிடே' (Accipitridae) பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சதுப்பு நிலங்களிலும், ஆறு, கடலில் கலக்கும் பகுதிகளிலும் இவற்றை அதிகம் காணலாம். பார்ப்பதற்குக் கழுகு போலவே இருக்கும்.

தலை, கழுத்து வெள்ளை நிறத்திலும், உடலும், இறகுகளின் பின்புறமும் செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும். வால் விசிறி வடிவில் அரை வட்டமாக இருக்கும். சிவப்பு நிறக் கண்களும், கூர்மையான, வளைந்த மூக்கும் உடையது. மூக்கு வெள்ளை நிறத்தில் இருக்கும். கால் நகங்கள் கத்தி முனைபோல கூராகவும், வலுவானதாகவும் இருக்கும். இது தனது கால்களால் வேட்டையாடுகிறது.

இரையைக் கொத்திக் கிழிக்க, கூரிய மூக்கு பயன்படுகிறது. இறந்த மீன், நண்டு, சிறு பறவைகள், எலி, நீர்ப்பாம்பு ஆகியவற்றை உண்ணும். இது கூடு கட்டும் முறை வித்தியாசமானது.

மரத்தில் குச்சிகள், முட்கள் போன்றவற்றை அடுக்கிவிட்டு அதில் குப்பை, சருகுகள், களிமண், பிளாஸ்டிக் பைகள், காகிதத் துண்டுகள் போன்றவற்றைப் போட்டு கிண்ண வடிவில் அழகான கூடு கட்டும். ஒருமுறை கட்டிய கூட்டை பல ஆண்டுகள் பயன்படுத்தும்.

குளிரும், வறட்சியும் இருக்கும் பனிக்காலத்தில் இனப்பெருக்கம் செய்யும். வெண் சிவப்பு நிறத்தில் இரண்டு முட்டைகள் மட்டும் இடும். பெண் பறவை முட்டைகளை அடைகாக்கும். குஞ்சுகளை ஆண், பெண் பறவைகள் இணைந்து வளர்க்கும். குஞ்சுகள் நன்றாகப் பறந்து தானே வேட்டையாடி உண்ணப் பழகும் வரை இரை கொண்டு வந்து ஊட்டும். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவை பரவலாகக் காணப்படுகின்றன.

- ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us