sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

பழமையான கதைகளோடு உலாவரும் நகரம்

/

பழமையான கதைகளோடு உலாவரும் நகரம்

பழமையான கதைகளோடு உலாவரும் நகரம்

பழமையான கதைகளோடு உலாவரும் நகரம்


PUBLISHED ON : டிச 12, 2016

Google News

PUBLISHED ON : டிச 12, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகின் பழமையான நகரங்களெல்லாம், ஆறு, கடல், மலை ஆகியவற்றின் அருகிலேயே அமைந்திருக்கின்றன. மிகப்பழைய ஊர்களில் ஒன்றான மதுரை, வைகை ஆற்றின் கரையிலும் திருப்பரங்குன்றம், பசுமலை, சமண மலை, நாகமலை, அழகர் மலை, ஆனைமலை ஆகிய குன்றுகளின் சூழலிலும் அமைந்த ஊர்.

பெயர்க் காரணம்

மதுரை என்று இன்று அழைக்கப்படும் ஊர், கல்வெட்டுகளில் மத்திரை என்றும், பிறகு மதிரை என்றும், பின்னர் மதுரை என்றும் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வழக்கில் மருதை என்று வழங்கப்பட்டு வந்தது. மருத மரங்கள் நிறைந்திருந்ததால், அது மருதை என்று அழைக்கப்பட்டிருக்கலாம். மருத நிலமானதாலும் (வயல்கள் நிறைந்தது) மருதை என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

நகரின் புகழ்மிக்க கோவில்கள்

மீனாட்சியம்மன் கோவில்: வரலாற்றின் ஊடாகத் தொடர்ந்து மதுரை வளர்ந்து வந்ததைப் போலவே, மீனாட்சி அம்மன் கோவிலும் வளர்ந்து வந்திருக்கிறது. பாண்டியரில் தொடங்கி, இஸ்லாமியர், நாயக்கர், மருதுபாண்டியர் என, பல்வேறு ஆட்சியாளர்களையும் பார்த்து, தற்போதைய தமிழகத்தையும் பார்த்து நிற்கிறது மீனாட்சி - சொக்கநாதர் கோவில்.

நாயக்கர்கள் காலத்தில் இதன் கலையழகு விரிந்தது. இதனுள் அமைக்கப்பட்டிருக்கும் ஆயிரங்கால் மண்டபமும், இதற்கு வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் புது மண்டபமும் இதற்குச் சாட்சி சொல்லி நிற்கின்றன.

திருப்பரங்குன்றம்: குன்றக் குடைவரை கோவில். முருகன் தெய்வானையை மணந்துகொண்ட தலம் என்று சொல்லப்படுகிறது. மிகப்பழைய கோவில். மும்மதத் தொடர்புடையது. குன்றத்தின் முன்புற அடிவாரத்தில் பழமைமிக்க முருகன் கோவில். குன்றத்தின் மறுபுற அடிவாரத்தில், பழமைமிக்க சமணர் குகைகள், சிற்பங்கள். குன்றத்தின்மேல் மதுரையை ஆண்ட கடைசி இஸ்லாமிய அரசர் சிக்கந்தர் பெயரில் அமைந்த பள்ளிவாசல்.

கூடலழகப் பெருமாள் கோவில்: பரிபாடல் காலத்திலிருந்தே, அதாவது சங்ககாலத்திலிருந்தே, கூடலழகப் பெருமாள் கோவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வைணவர்களின் 108 திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

தூய மரியாள் ஆலயம்: கீழவெளி வீதியில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், கி.பி.1840ல் கட்டப்பட்டது.

- ஆறுமுகத்தமிழன்






      Dinamalar
      Follow us