தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேர்ந்த நெசவாளி

தேர்ந்த நெசவாளி

தேர்ந்த நெசவாளி


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தூக்கணாங்குருவியின் உயிரியல் பெயர் 'ப்ளோசியஸ் பிலிப்பினஸ்' (Ploceus philippinus). ஆங்கிலத்தில் 'வீவர் பேர்டு' (Weaver Bird) எனப்படுகிறது. அளவிலும் உடல் அமைப்பிலும் ஊர்க் குருவியைப் போல இருக்கும். இதன் தலையும் மார்பும் மஞ்சளாக இருக்கும். வயல்வெளியை ஒட்டிய இடங்களில் திரள்களாகக் கூடி வாழும். முருங்கை மரம், ஈச்ச மரம், கருவேல மரம், இலந்தை மரம், பனை மரம், மின் கம்பிகளில் சுரைக்காய் வடிவிலான கூடுகளைக் கட்டும்.

கூடுகளை புற்கள், நெற்கதிர்களின் நார்களைக் கொண்டு கட்டுகின்றன. ஒவ்வொரு நாரும் 20 முதல் 60 செ.மீ. நீளம் கொண்டதாக இருக்கும். ஒரு கூட்டைக் கட்டி முடிக்க, 500 முறை இவை மேலும் கீழுமாகப் பறக்கின்றன. கட்டி முடிக்கச் சுமார் பதினெட்டு நாட்கள் ஆகும். நடுவிலிருக்கும் உருண்டை வடிவத்தைக் கொண்டுவர மட்டுமே எட்டு நாட்கள் பிடிக்கும். அழகான இந்தக் கூடுகளைக் கட்டுவது ஆண் பறவைகள்.

பெண் குருவிகள் கூட்டின் உள்ளே தளம் அமைத்து 2 முதல் 4 வரை முட்டைகள் இட்டு அடை காக்கும். சுமார் 14 நாட்களில் வெளிவருகிற குஞ்சுகள், அடுத்த 17 நாட்களில் வளர்ந்து கூட்டை விட்டுப் பறந்து சென்று விடுகின்றன. சில ஆண் பறவைகள் குஞ்சுகளுக்கு உணவளிப்பதில் உதவுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் 10 முதல் 14 ஆண்டுகள்.

படங்கள் மற்றும் தகவல்: ராமலக்ஷ்மி, பெங்களூர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us