sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

விலங்குகளின் கிராமம் (3)

/

விலங்குகளின் கிராமம் (3)

விலங்குகளின் கிராமம் (3)

விலங்குகளின் கிராமம் (3)


PUBLISHED ON : அக் 19, 2016

Google News

PUBLISHED ON : அக் 19, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“ஏய், கண்ணம்மா! நீ என்ன சொன்னாய்? நான் ஒரு பெரிய டாக்டர். வெளிநாடுகள் எல்லாம் சென்று வைத்தியம் பார்த்திருக்கிறேன். நான் உன் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டுமா? நீதான் என் பேச்சைக் கேட்க வேண்டும்!”

“நான் யாருக்கும் அடிமையல்ல!” காகம் கண்ணம்மாவுக்குக் கோபம் வந்தது.

“அப்புறம் நீ யார்? அரபுநாட்டு இளவரசியா? தெருக்கூட்டும் வேலைக்காரிதானே நீ?”

“நான் ஒரு துப்புரவுப் பணியாளராக இருப்பதால் யார் வேண்டுமானாலும் என் தலையில் ஏறி உட்காரலாம் என்று நினைக்காதீர்கள். இந்த வேலையை தூக்கிப் போட்டுவிட்டு நான்பாட்டுக்குப் போய்விடுவேன், அவ்வளவுதான். வேண்டுமென்றால் வேறு யாரிடமாவது இந்த வேலையைக் கொடுங்கள். எப்போதடா பொழுது விடியும், யாரிடமாவது சண்டை போடலாம் என்று காத்துக்கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது.” காகம் கண்ணம்மா எழுந்து விருட்டென்று வெளியே சென்றது.

“டாக்டர் பெரியமியான், கண்ணம்மாவைக் கோபப்படுத்த வேண்டாம். அவள் கையில் சாவியைக் கொடுத்து அனுப்புங்கள்.” மொசமொசப்பன் பரிந்துரைத்தது.

காகம் கண்ணம்மாவுக்குச் சினமூட்டுவது நல்லது அல்ல என்று பெரியமியானுக்கும் தெரியும். அது எதுவும் பேசாமல் சாவியை எடுத்து கண்ணம்மாவிடம் கொடுத்தது. பிறகு, சாவியை மற்றொருவரிடம் கொடுத்துவிட்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? காலம் கெட்டுக் கிடக்கிறது. யாரையும் நம்பக்கூடாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டு அவசர அவசரமாகச் சாப்பிட ஆரம்பித்தது.

அந்தக் கிராமத்தின் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தது பச்சைக்கிளி கிக்கியம்மா. அது நல்ல அறிவாளி. பழைய இலக்கண, இலக்கியங்களை எல்லாம் நன்றாகப் படித்திருக்கிறது. அவற்றை இனிமையான குரலில் எடுத்துச் சொல்லி, கற்பிக்கவும் தெரியும். அறிவு குறைந்த மாணவர்களுக்குப் புரிய வைப்பதற்காக ஒரே விஷயத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் சொல்லும். இந்த விஷயத்தில் அது சலிப்படையாது. கிராமத்தில் வசிக்கும் விலங்குகளும் பறவைகளும் அதன் மீது மிகவும் மரியாதை கொண்டிருந்தன.

அன்று தனக்குப் பிறந்த நாள் என்பதால் கிக்கியம்மா சீக்கிரமே எழுந்து கோயில் குளத்துக்குக் குளிக்கச் சென்றது. இறைவணக்கப் பாடலில் இருந்து சில வரிகளை முணுமுணுத்தவாறே குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்றது.

கோயில் பூசாரியான யானை கருமலை அப்போதுதான் விளக்கு ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தது. கிக்கியம்மாவுக்குக் கோபம் வந்தது. பொழுது விடிந்து நேரமாகிவிட்டது. ஆயினும் கோயிலில் இன்னும் விளக்கு ஏற்றவில்லையே, இது என்ன அநியாயம்! அக்கிரமம்!

“என்ன, கருமலையானே, நேராநேரத்துக்குக் கோயிலில் விளக்கு ஏற்றவில்லை என்றால் அப்புறம் எதற்கு உங்களைப் பூசாரியாக வைத்திருக்கிறார்கள்? படையல் சோற்றை உருட்டி உருட்டித் தின்பதற்கா?”

கிக்கியம்மா கோபமாகப் பேசியது.

யானை கருமலை மெதுவாகப் பிளிறியது. பழைய பூக்களை அகற்றிவிட்டு விளக்கு ஏற்றியது. பிறகு கிக்கியம்மாவின் முன்னால் வந்து நின்றது. கிக்கியம்மாவுக்கு அச்சம் ஏற்பட்டது. கருமலை சற்று காலை அசைத்தால் போதும், தான் நசுங்கி சட்டினி ஆகிவிடுவோம் என்று நடுங்கியது. தேவையில்லாமல் பேசியிருக்கக் கூடாது.

“இதோ பாருங்கள், டீச்சரே! பிள்ளைகளை அதட்டுவது போல் என்னிடம் பேச வேண்டாம். உங்கள் அதிகாரத்தை எல்லாம் பள்ளிக்கூடத்தில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்!” என்று சொல்லிவிட்டு, கருமலை திரும்பி நடந்தது.

கிக்கியம்மா ஒரு வார்த்தையும் பேசவில்லை. கையிலிருந்த பூக்களையும் வாழைப்பழத்தையும் பாலையும் கோயில் படிக்கட்டில் வைத்தது. வணங்கிய பிறகு வெளியே வந்தது. “பாலையும் பழத்தையும் கடவுளுக்குப் படைத்துவிட்டு வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுங்கள்” என்று கருமலையிடம் சொல்வதற்கு அதற்குத் தைரியம் இல்லை. பிறந்தநாளன்று காலையிலேயே கேட்க வேண்டிய திட்டுகளைக் கேட்டாகிவிட்டது. இதற்கு மேலும் வேண்டுமா?

கிக்கியம்மா தன் வீட்டுக்கு வந்தது. காகம் கண்ணம்மா வாசலையும் வராந்தாவையும் பெருக்கிவிட்டுக் காத்திருந்தது. இரண்டும் சமையலறைக்குச் சென்று விருந்து சமைக்கும் வேலையில் ஈடுபட்டன. கிக்கியம்மா நடந்த விஷயங்களையெல்லாம் மறந்து பாட்டுப் பாடிக்கொண்டே கண்ணம்மாவுடன் வேலை செய்தது.

சற்று நேரம் சென்றது. பசு அன்புராணி, பாயசம் வைப்பதற்கான பாலை எடுத்து வந்தது.

“என்ன அன்புராணி, பால் இவ்வளவுதான் இருக்கிறதா? இது போதாது என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் கிடைக்குமா?” பாலை அளந்து வாங்கியவாறு கிக்கியம்மா கேட்டது.

“எப்படிக் கிடைக்கும் டீச்சரம்மா? பருவநிலை சரியில்லையே... காற்றும் குளிருமாக இருக்கிறதே! பாலெல்லாம் வற்றத் தொடங்கிவிட்டது. டீச்சரம்மா கேட்கிறார்களே, மறுக்கக் கூடாதே என்றுதான் இந்தப் பாலை நான் கொண்டு வந்தேன். என் பிள்ளைகளுக்குக்கூட நான் ஒரு துளி பால் கொடுக்கவில்லை, தெரியுமா?”

பசு அன்புராணி வராந்தாவில் ஏறி களைப்பாக அமர்ந்தது. தன் வெற்றிலைபாக்குப் பெட்டியை எடுத்துத் திறந்தது.

“அந்த அழகுராணி ஆட்டிடம் கேட்டுப் பார்த்தீர்களா, டீச்சரம்மா? அவளிடம் பால் இருந்தாலும் இருக்கும்.” காகம் கண்ணம்மா சமையலறையில் தேங்காய் துருவிக்கொண்டே சொன்னது.

பசு அன்புராணி கடுகடுப்பாகச் சொன்னது: “ஆமாம், ஆமாம், அவளிடம் இருக்கும் போங்கள்! அவள் ஏதோ கொஞ்சம் பால் தருவாள். ஆனால், அதன் நிறம் மட்டும்தான் பால்போல் இருக்கும். மற்றபடி பச்சைத் தண்ணீர்தான்! அதை வாங்கிக்கொள்ளுங்கள் போங்கள்!”

“அப்படி இல்லை. அன்றொரு நாள் நீ வந்து, பாத்திரம் தவறி விழுந்து பால் முழுதும் தரையில் கொட்டிவிட்டது என்று சொன்னாயல்லவா… அன்று நான் ஆடு அழகுராணியிடம்தான் பால் வாங்கினேன். அந்தப் பால் அடர்த்தியாக இருந்தது” என்று கிக்கியம்மா சொன்னது.

“அந்தப் பாலை நீங்கள் கவனித்துப் பார்த்திருக்க மாட்டீர்கள் டீச்சரம்மா. பால் முழுதும் ஆட்டு ரோமங்கள் விழுந்து கிடந்திருக்கும். யாருக்குத் தெரியும், ஒன்றிரண்டு ஆட்டுப் புழுக்கைகள்கூட கிடந்திருக்கலாம்” என்று சொன்ன பசு அன்புராணி, எரிச்சலுடன் தன் வெற்றிலை பாக்குப் பெட்டியை எடுத்துக்கொண்டு எழுந்தது. ஆடு அழகுராணியைப் பற்றி புகழ்ந்து பேசுவதைக் கேட்பதற்கெல்லாம் நேரமில்லை. நிறைய வேலைகள் கிடக்கின்றன. அது திரும்பிப் பார்க்காமல் நடந்தது.

காகம் கண்ணம்மாதான் சென்று ஆடு அழகுராணியிடம் பால் வாங்கி வந்தது. வெயில் சூடேறியபோது பிறந்தநாள் விருந்து தயாரானது.

முதலில் வந்த விருந்தாளி அணில் அண்ணாச்சிதான். அது கிராமத்தில் மளிகைக் கடை வைத்திருக்கிறது. அதன் கடையில் இல்லாத பொருட்களே இல்லை. ஆனால், அது எடைபோடுவதிலும் அளப்பதிலும் ஏமாற்றுவதாகவும் பொருட்களுக்கு அதிகமான விலை வைப்பதாகவும் கிராமத்துப் பிராணிகள் குறைப்பட்டுக்கொண்டன.

அந்தக் கிராமத்தில் வேறு மளிகைக்கடை எதுவும் இல்லை. அதனால் அணில் அண்ணாச்சியின் வியாபாரம் நன்றாக நடந்துகொண்டிருந்தது. கிக்கியம்மாவும் அணில் அண்ணாச்சியும் மிகவும் நட்புடன் இருந்தன. சிவப்பு மிளகாய்ப் பழம் டீச்சரம்மாவுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அணில் அண்ணாச்சி, அழகான ஒரு கூடை நிறைய மிளகாய் கொண்டு வந்திருந்தது.

அதன் பிறகு முயல் மொசமொசப்பனும் வந்தது. அது ஒரு பூவன் வாழைப் பழக் குலையை, பிறந்தநாள் பரிசாக எடுத்து வந்திருந்தது.

பச்சைக்கிளி கிக்கியம்மாவும் காகம் கண்ணம்மாவும்

சேர்ந்து விருந்தினர்களை உபசரித்து அமரவைத்தன.

“இனி யார் யார் வருவார்கள்?” மொசமொசப்பன் கேட்டது.

(தொடரும்)

மலையாளம்: சுமங்களா தமிழில்: யூமா வாசுகி






      Dinamalar
      Follow us