தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வாழ்நலம் தரும் வனம்

வாழ்நலம் தரும் வனம்

வாழ்நலம் தரும் வனம்


PUBLISHED ON : ஏப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி 'காடு' எனப்படும். சதுப்பு நிலக் காடுகள், பசுமை மாறாக் காடுகள் என காடுகளில் இரண்டு முக்கிய வகைகள். காடுகளின் நில அமைப்பையும், அங்கு வளரும் மரங்கள், தாவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். பசுமை மாறாக் காடுகள், சதுப்பு நிலக் காடுகள், அகன்ற இலைக் காடுகள், மலையகக் காடுகள், முட்புதர்க் காடுகள் போன்றவை காடுகளின் முக்கிய வகைகள்.

பூமியின் மொத்த நிலப்பரப்பில் 30% காடுகளால் சூழப்பட்டுள்ளது. உலகில் உள்ள விலங்கினங்களில் 50% காடுகளை வாழிடமாகக் கொண்டுள்ளன. காடுகள், காற்றில் உள்ள கரியமில வாயுவை உட்கொண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்துகின்றன. வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துதல், மண் அரிப்பைத் தடுத்தல் ஆகியவற்றில் காடுகளின் பங்கு முக்கியமானது. நாம் வாழும் சூழலைப் பாதுகாப்பதில் காடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே காடுகளைப் பாதுகாப்பதன் மூலம் நம் உலகை நாமே பாதுகாக்கலாம்.

காடுகளுக்கு தமிழில் உள்ள வேறு பெயர்கள்: வனம், கானகம், அடவி, புறவு, பொதும்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us