PUBLISHED ON : ஜன 20, 2020

கடலின் அடி ஆழத்தில் வாழும் இந்த உயிரினம் பார்ப்பதற்குத் தாவரத்தைப் போல இருக்கும். இதன் பெயர் வீனஸ் பூக்கூடை (Venus Flower Basket). இது ஒருவகைப் பூச்சி. கண்ணாடி இழைகளைக் கொண்டு கைகளால் பின்னப்பட்டது போல் இருக்கும். பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்; கடல் உயிரினங்கள் மட்டுமல்ல, மனிதர்களையும் கவரக்கூடியது என்றுதான் சொல்ல வேண்டும்.
கடலில் ஆயிரம் மீட்டர் ஆழத்தில் வாழும் இந்த உயிரினம் கடல் பஞ்சு ஆகும். மேற்கு பசிபிக் கடலில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளின் ஆழமிக்க பகுதிகளில் காணப்படுகிறது. இந்தியப் பெருங்கடலிலும் வீனஸ் பூக்கூடையைப் பார்க்கலாம்.
ஜப்பான் நாட்டில் வீனஸ் பூக்கூடையைத் திருமணப் பரிசாகக் கொடுக்கும் பழக்கம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அழகான தேவதைகளை வீனஸ் என்று ரோம் நாட்டு மக்கள் அழைப்பார்கள். கடல் பஞ்சு பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், வீனஸ் பூக்கூடை என அழைக்கப்படுகிறது.

