தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அவளுக்கென்று ஒரு மனம்!

அவளுக்கென்று ஒரு மனம்!

அவளுக்கென்று ஒரு மனம்!


PUBLISHED ON : ஏப் 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள் ஏப்ரல் 2

“சிறுவயது முதலே ஐஸ்வர்யாவின் நினைவாற்றல் அபாரம். யாருடனும் பேசாமல், புதிர்க்கட்டங்களை அந்தந்த வடிவங்களில் அடுக்கி வைப்பாள். அவளுக்குப் புதிர்க்கட்டங்கள் அடுக்குவது நன்றாக வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டோம். அதற்காக அவளுக்கு நிறைய பஸில்களை வாங்கிக் கொடுத்தோம்” என்கிறார் கிரிஜா ஸ்ரீராம். இவரது மகள் தான் ஐஸ்வர்யா. இவருக்கு 'பஸில் குயின்' என்றே பெயர் வந்துவிட்டது.

ஐஸ்வர்யா குறித்து, கிரிஜா தொடர்ந்து பேசினார்...

“ஆட்டிசம் குறைபாட்டைச் சரியாக எதிர்கொள்வதில் ஐஸ்வர்யா பலருக்கு முன்னோடி. 37 வயது நிரம்பிய ஐஸ்வர்யா, புதிர்க்கட்டங்களை அடுக்குவதில் திறமைசாலி. 50, 100 என்று தொடங்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிர்க்கட்ட துண்டுகளை அடுக்கி அனைவரையும் அசர வைத்துள்ளார்.

ஆட்டிசக் குறைபாடு உள்ளவர்கள், புதிர் விளையாட்டுகளில் ஈடுபடுவது அவ்வளவு சுலபமல்ல. இதற்கு நிறைய பொறுமை தேவை. பலருடைய உதவி இருந்தால்தான், புதிர்க் கட்டங்களை (பஸிலை) அடுக்க முடியும். ஆனால், ஐஸ்வர்யா யாருடைய உதவியும் இல்லாமல், தனியாக உட்கார்ந்து மனத்தில் தோன்றுவதை வைத்து புதிர்க் கட்டங்களை முடித்துவிடுவாள்.

புலி, சிங்கம், காடு, இயற்கைக் காட்சிகள், மிக்கி மெளஸ், அமெரிக்க சுதந்திர தேவி சிலை என பலவகையாக புதிர்க் கட்டங்களை போட்டு இருக்கிறாள். புதிர்க் கட்டங்களை அடுக்கி, அதற்கு உயிர் கொடுப்பதுதான் அவளுடைய உலகம். அவளுடைய புதிர்க் கட்டங்கள் மிகப்பெரிய ஓவியக் கண்காட்சிகளில் வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. பஸில் மட்டுமல்லாமல், ஓவியத்திலும் ஆர்வம் அதிகமுண்டு. மனத்தில் தோன்றும் உருவங்களை, அவளுக்குப் பிடித்த மாதிரி வரைவாள். அவள் வரைந்த சிறந்த ஓவியங்களைக் காலண்டராகக் கொண்டு வந்தோம்.

அட்டவணை போட்டு ஐஸ்வர்யாவின் அன்றாட வேலைகள் நடக்கின்றன. பாட்டு, யோகா, வாக்கிங், காய்கறி நறுக்குதல், 'மைக்ரோவேவ் அவனி'ல் சமைத்தல், டைரி எழுதுதல், பஸில் அடுக்குதல் என, சுறுசுறுப்புடன் இயங்குவாள். ஒருமுறை குக்கர் வைப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தால் போதும், இன்னொருமுறை எந்தச் சந்தேகமும் இல்லாமல், அதைச் செய்வாள்.

சின்ன வயதில் அவளுக்கு எழுத்துப் பயிற்சி கொடுத்தோம். சில ஆண்டுகளில் அது தடைபட்டது. மீண்டும் எழுத்துப் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தோம்.

அதற்காக, அவளுடைய அன்றாட வேலைகளை ஒரு டைரியில் எழுதிக் காண்பிக்கச் சொன்னோம். அவளுடைய எண்ணங்களை அவளுக்குத் தெரிந்த மொழியில் வெளிப்படுத்தினாள். அவளுடைய மொழி தபால் தந்தியைப் போல சுருக்கமாக இருக்கும். இலக்கணப் பிழை இருந்தாலும், திருத்தாமல் அவள் பாணியில் விட்டுவிட்டோம். 2016இல் அவள் எழுதிய டைரிக் குறிப்புகளைப் புத்தகமாக வெளியிட்டோம்.

ஐஸ்வர்யாவின் உலகம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவர்கள், நிச்சயம் 'அவளுக்கென்று ஒரு மனம்' என்ற புத்தகத்தை வாசிக்க வேண்டும். அவளுடைய மொழி, அதை வெளிப்படுத்தி இருக்கும் அழகு, நிச்சயம் அனைவரின் கண்களைத் திறக்கும்.” என்றார் கிரிஜா.

எல்லாக் குழந்தைகளையும்போல் ஆட்டிசக் குழந்தைகளையும் மதிப்போடும், மரியாதையோடும் நடத்துவதுதான் ஆட்டிச விழிப்புணர்வு தொடர்பாக ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் நமக்கு சொல்லும் செய்தி.

ஆட்டிசம் என்றால் என்ன?

ஏ.எஸ்.டி. (ASD) ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஸாடர் (குறைபாடு) என்பதுதான் இதன் முழுமையான பெயர். இது ஒரு நரம்பியல் குறைபாடு. இந்தக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இன்னும் தெளிவான காரணங்கள் கண்டறியப்படவில்லை; அதேபோல் இதற்கு மருந்துகளும் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us