உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 05, 2018

அ நிறம் | அளவு
என்னடா இது வேடிக்கையாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இது நிஜம். கடந்த 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நில அளவின்படி, ஜப்பானின் வடக்குப் பகுதியில் இருந்த இசாமி ஹனகிட்டோ ஹோஜூமா எனும் குட்டித்தீவு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.
இது கடல்மட்டத்தில் இருந்து 4.6 அடி உயரமே இருந்தது. தற்போது இத்தீவு காணாமல் போனதாகத் தெரியவந்துள்ளது. கனிம வளங்கள் நிறைந்த இத்தீவு காணாமல்போனது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள ஜப்பான், இத்தீவைத் தேடும் பணியில் தனது கடலோர காவல்படையினரை முடுக்கிவிட்டுள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட சமீபத்திய நிலநடுக்கங்களால், இத்தீவு மூழ்கி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
