sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/நச்சற்ற மரமேறிப் பாம்பு!

நச்சற்ற மரமேறிப் பாம்பு!

நச்சற்ற மரமேறிப் பாம்பு!


PUBLISHED ON : ஜூலை 08, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழப் பெயர்: கொம்பேறிமூக்கன்

ஆங்கிலப் பெயர்: ப்ரோன்ஸ்பேக் ட்ரீ ஸ்னேக் (Bronze back tree snake)

அறிவியல் பெயர்: டென்ட்ரேலாபிஸ் ட்ரிஸ்டிஸ் (Dendrelaphis tristis)

அளவு: 100 செ.மீ.

எப்படி அடையாளம் காண்பது?

* மெல்லிய, நீளமான உடல், பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும். பக்கவாட்டில், வெள்ளை நிறம் தோன்றும்.

* தலைப்பகுதியில் வெள்ளை நிற பொட்டு போன்ற ஓர் அடையாளம் காணப்படும்.

* சீண்டப்படும் பொழுது, கழுத்தில் நீல நிறமாற்றத்தைக் காணலாம். இந்தியப் பாம்புகளில், மிகவும் மெல்லியது.

இனப்பெருக்கம்: முட்டையிடும் இனம். (சராசரியாக 8 முட்டைகள் வரை இடும்).

பழக்கவழக்கம்: கொம்பேறிமூக்கன் பாம்புகள், மரமேறி வகையைச் சார்ந்தவை. மரப்பொந்து, பாறை இடுக்குகள், அடர்ந்த இலை மற்றும் புதர்களில் வாழ்பவை.

இரை: ஓணான், மரப்பல்லி, சிறு பறவைகள், பூச்சிகளை வேட்டையாடி உண்பவை.

நச்சற்ற பாம்பு!

கொம்பேறிப் பாம்புகள் நச்சற்றவை. ஆனால், மக்களோ இதை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்பாகக் கருதுகின்றனர். அவை மனிதர்களைத் தீண்டினால், உடனே இறப்பார்கள் என்றும், அவரை அடக்கம் செய்யுவரை மரக்கொம்பில் ஏறி கவனிக்கும் என்பதும் மூடநம்பிக்கை ஆகும்.

- முனைவர் ந.ச.மனோஜ்

நிறுவனர், ஆராய்ச்சியாளர்.

உலகளாவிய பாம்புகடி கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, கிருஷ்ணகிரி.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us