தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கடலில் ஒரு பூங்கா

கடலில் ஒரு பூங்கா

கடலில் ஒரு பூங்கா


PUBLISHED ON : ஆக 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தின் தெற்குக் கடலோர வளைகுடாவில் துவங்கி, இலங்கையின் தலைமன்னார் பகுதி வரையில் விரிந்துள்ள கடற்பகுதிக்கு 'மன்னார் வளைகுடா' என்று பெயர். இந்த வளைகுடாவில் அமைந்துள்ள, ராமநாதபுரம் தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் 21 தீவுகள் இருக்கின்றன. 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் பரப்பளவில் இருக்கும் இந்தத் தீவுகளைச் சுற்றி, 117 வகையான பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இவை 94.3 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்த ஒரு பெரிய பவளப்பாறை தொகுப்பை ஏற்படுத்துகின்றன. இந்தப் பகுதியில் ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகமாக இருப்பதால், மீன் உட்பட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் இங்கு வசிக்கின்றன. இந்தியாவில் இருக்கும் 2,200 துடுப்பு வகை மீன்களில், 510 மீன்கள் இங்கு இருக்கின்றன. மீன்கள் மட்டுமன்றி, 79 கணுக்காலிகள் (Arthropods), 108 புரையுடலிகள் (Poriferans), 260 மெல்லுடலிகள் (Molluscs), 100 முட்தோலிகள் (Echinoderms), 147 கடற்பாசி வகைகள், 160 கடற்பறவை இனங்கள் மற்றும் ஏராளமான அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக இருக்கிறது.

உலகின் வளம் மிக்க கடல் பகுதிகளில் மன்னார் வளைகுடா முக்கியமானது. அதனால், யுனெஸ்கோ அமைப்பு இதைக் கடல்சார் பூங்காவாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. அதன் விளைவாக இந்திய அரசு 1989ல், தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான 560 சதுர கி.மீ. மன்னார் வளைகுடா பரப்பை, 'தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா' என்று அறிவித்தது.

கடலின் ஒரே சைவப் பாலூட்டி 'டியுடாங்' எனும் கடற்பசு. கடற்புல்லை மட்டுமே உண்டு வாழும் இந்த உயிரினம், உலகின் பிற பகுதிகளில் ஏறத்தாழ அழிந்துவிட்டாலும், மன்னார் வளைகுடாவில் காணப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us