PUBLISHED ON : ஆக 15, 2016

* நம் நாட்டின் தேசியப் பறவையாக மயில் 1963ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மயிலை வேட்டையாடுவது குற்றம். வெண்மை, சாம்பல் நிறங்களில் மயில்கள் காணக் கிடைத்தாலும், நம் நாட்டில் இருக்கும் நீல வண்ண மயிலே நமது தேசியப் பறவை.
* தேசிய கீதமான 'ஜன கண மன' பாடல் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி நூலில் உள்ளது. இந்த கீதம் எழுதப்பட்டு 105 வருடங்கள் ஆகின்றன.
* இந்தியாவின் தேசியப் பாடல் வந்தே மாதரம். இதை பங்கிம் சந்திர சாட்டர்ஜி வங்க மொழியில் எழுதினார். இது, 1950ம் ஆண்டு ஜனவரி 24ல் தேசியப் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 'ஆனந்த மடம்' என்ற நூலில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. தேசியப்பாடல், தேசிய கீதம் இரண்டுமே வங்க மொழி என்பது ஆச்சரியமாக இல்லை?!
* வங்கப் புலி இந்தியாவின் தேசிய விலங்காக 1973ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்புவரை சிங்கமே தேசிய விலங்காக இருந்தது. சோழ மன்னர்கள் புலியைத் தங்களது அரசுச் சின்னமாக வைத்திருந்தனர்.
* தாமரை இந்தியாவின் தேசிய மலராக 1950ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. தூய்மை, நீண்ட ஆயுளின் அடையாளமாக தாமரை கருதப்படுகிறது.
* இந்திய அரசின் உயரிய விருது பாரத ரத்னா. கலை, அறிவியல், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சாதனை புரியும் இந்தியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது 1954ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 3 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும். இவ்விருது ஏற்படுத்தப்பட்டபோது, அமரர்களுக்கு வழங்கப்படாது என்ற விதி பின்பற்றப்பட்டது. பின்னர் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியர் அல்லாத கான் அப்துல் கஃபார் கான், அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா மூவரும் பாரத ரத்னா விருது பெற்ற தலைவர்கள்.
* கடந்த 2008ல் இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் நீளமான நதி இது. புராண, இதிகாசக் கதைகளில் கங்கை இடம்பெற்றுள்ளது. தற்போது இருக்கும் கங்கை நதி மேலும் மாசுபடாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
* இந்தியாவின் தேசிய விளையாட்டு. ஒலிம்பிக் விளையாட்டில் 1928 முதல் 1956 வரை தொடர்ச்சியாக தங்கம் வென்றுள்ளனர். இது தவிர ஒரு முறை வௌ்ளி, மறுபடியும் தங்கம், இரண்டு முறை வெண்கலப் பதக்கங்கள் வென்றிருக்கிறார்கள்.
