தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மழைக்கொரு காலம்...

மழைக்கொரு காலம்...

மழைக்கொரு காலம்...


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

மனிதனின் அடிப்படை தேவைகளில் முக்கியமானவை உணவு, குடிநீர். இந்த இரண்டும் நமக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க, மழை வேண்டும்.

மழை, குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே தொடர்ச்சியாகப் பெய்கிறது. அப்படி பெய்யும் மழையே, பருவமழை . மழை தரும் காலம், காற்று வீசும் தன்மையை கணக்கில் கொண்டு அவை தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என்று இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.

தென் மேற்குப் பருவமழைக்காலம் (south west monsoon- சவுத் வெஸ்ட் மான்சூன்) ஜூன் முதல் செப்டம்பர் வரை. இந்த மழை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளாவில் தொடங்கும்.

வடகிழக்குப் பருவ மழை (north east monsoon- நார்த் வெஸ்ட் மான்சூன்) அக்டோபர் முதல் டிசம்பர் வரை. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நல்ல பயனடையும்.

தமிழகத்தின் ஒட்டு மொத்த மழையில் 50 சதவீதம், வடகிழக்குப் பருவ மழையின் வாயிலாகக் கிடைக்கிறது.

இந்த இரண்டு காலங்களில் பெய்யும் மழையை மனதில் வைத்தே, விவசாயிகள் விதைப்பது, நடவு செய்வது போன்ற பணிகளைச் செய்கிறார்கள்.

இந்த வருடம் அக்டோபர் 20ஆம் தேதி, வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us