PUBLISHED ON : அக் 19, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாம் வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொள்ளக்கூடாது என உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்து வருகிறார். 'நாம் அவர்களோடு தொடர்பு கொண்டு, அவர்களை பூமிக்கு அழைத்தால், அது நமக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. காரணம் வேற்றுகிரகவாசிகள் நம்மைவிட புத்திசாலிகளாக இருந்துவிட்டால், அவர்கள் நம்மை அழிக்கவோ அல்லது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்தவோ கூடும். இதனால், வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது' என்கிறார், ஸ்டீபன் ஹாக்கிங்.

