PUBLISHED ON : ஆக 15, 2016

சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய எரிமலை, செவ்வாய் கிரகத்தில் உள்ளது. பெயர், ஒலிம்பஸ் மான்ஸ் (Olympus Mons). ஏறக்குறைய 27 கி.மீ. உயரமும் 500 கி.மீ. விட்டமும் கொண்டது. இவ்வளவு பெரிதாக இருந்தாலும் மற்ற எரிமலைகளோடு ஒப்பிடும்பொழுது வயது குறைவானதாகக் கருதப்படுகிறது. நாசாவின் மரைனர் 9 (Mariner 9) என்ற விண்கலம் 1971ல் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வந்த போதுதான் இதை எரிமலையை என்று கண்டுபிடித்தனர். அதுவரை வெறும் மலை என்று எண்ணியிருந்தனர். கடைசியாக இந்த எரிமலை 20ஆம் நூற்றாண்டில் நெருப்புக் குழம்பைக் கக்கியதாக புவியியலாளர்கள் கணிக்கிறார்கள். இந்த எரிமலையிலிருந்து பீறிட்ட நெருப்புக் குழம்பு விண்கற்களாக மாறி பூமியில் விழுந்துள்ளன. இந்தக் கற்களை அன்டார்டிக்காவில் (Antarctica) கண்டெடுத்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களின் தன்மையும் அன்டார்டிக்காவில் கண்டெடுக்கப்பட்ட கற்களின் தன்மையும் ஒரே மாதிரி இருப்பதைப் பரிசோதனை மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
