தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அழகான ஆபத்து

அழகான ஆபத்து

அழகான ஆபத்து


PUBLISHED ON : ஆக 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காளான், பூ, வண்ணக் குடை, கிளி கூண்டு மாதிரி பல்வேறு வடிவங்களில் அழகாக தோற்றம் கொண்டிருக்கின்றன ஜெல்லி மீன்கள் (Jelly fish). உருவம்தான் அழகு. அருகில் சென்றால் ஆபத்து. வெள்ளை, ஆரஞ்சு, நீலம், சிவப்பு நிறங்களில் ஜெல்லி மீன்கள் இருக்கின்றன. பெரும்பாலும் ஆழ் கடல் பகுதிகளில் வாழும். பெயரில் 'மீன்' இருப்பதால், இது மீன் வகையைச் சேர்ந்தது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். இது நிடர்யா (Cnidaria) என்ற விலங்கின வகையில் வருகிறது. ஜெல்லியில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன.

இவற்றிற்கு நீளமான உணர்கொம்புகள் (tentacles) உண்டு. அந்த உணர்கொம்புகளின் நுனியில் உள்ள கொடுக்குகள்தான் ஆபத்தானவை, விஷம் உள்ளவை. நம் பெருவிரல் நகம் அளவிலான சிறிய வகை ஜெல்லி மீன்கள் கூட இருக்கின்றன. நகம் அளவு எனினும் விஷம் குறையாது. இந்த ஜெல்லிகள், உணர்விகளை உள்ளிழுத்து, வெளியே தள்ளும் இயக்கத்தின் வாயிலாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்கின்றன. இவற்றிற்கு எலும்புகளும் கிடையாது, வேகமாக நீந்தவும் முடியாது.

கடலில் இருக்கும் சிறிய வகைத் தாவரங்கள், குட்டி மீன்கள் மற்றும் லார்வாக்களை உணவாக உட்கொள்கின்றன. உணர்கொம்புகளில் உயிரிகள் வந்து பட்டுவிட்டால், நூல் போல் இருக்கும் சிறு சிறு விஷக் கொம்புகள் நீண்டு எதிரியை வீழ்த்திவிடும்.

கடலுக்குள் காணப்படும் அழகான ஆபத்து ஜெல்லி மீன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us